பக்கம்:வானொலியிலே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் விழா 65

களேயே கன்னிப் பெண்கள் கணவனுக ஏற்பார்கள். இவ்வழக்கம் இன்றும் சில கிராமங்களில் கையாளப்பெற்று வருகிறது. பிடிபடுவதற்காக என்று மாடுகளும் பிடிப்பதற் காக என்று மக்களும் பல கிராமங்களுக்குச் சென்று வருவது உண்டு. இந்த நாட்களில் அந்தந்த கிராமங்களில் வீரங்கலந்த ஒரு தனியழகு தோன்றும். மனிதனே அடக்க மாடும், மாட்டை அடக்க மனிதனும் போராடுகிற துணிகரக் காட்சியானது வீரத்தின் உச்ச நிலையை நமக்கு அறிவிக்கும்.

முடிவு

3000 ஆண்டுகளுக்கு மேலாக இவ்விழா நடை பெற்று வந்தும்கூட வெற்றி பெற்றது மாடா ? மனிதன ? என்ற முடிவிற்கு இன்னும் வர முடியவில்லை. மாடுகளே அடக்கிய மனிதர்களும், மனிதர்களை அடக்கிய மாடுகளும் உண்டு. முடிவு கூறுவது எளிதல்ல என்ருலும் கூறலாம். வாழ்வுக்கு உதவுவது ஆணு ? பெண்ணு ? உழவுக்கு உதவுவது மாடா ? மனிதன ? என்ற கேள்விக்குப் பதில் என்ன ?

ஆணும் பெண்ணும் சேராவிடில் வாழ்வு இல்லை :

மாடும் மனிதனும் சேராவிடில் உழவில்லே என்பதுதானே. ஆம் அதுதான் முடிவு. இவ்வுண்மையை நமக்கு அறிவிப்பதற்காகத்தான் மாடு, மனிதன், கலப்பை இவை மூன்றும் சேர்ந்த ஏர் ஒன்றை ஒரு உயிராகக் கற்பனை செய்து அதற்கு,

' கால்பத்து, கண்ஆறு, வாலிரண்டு, வயிறு மூன்று

என ஒரு புலவர் கூறியிருக்கிருர். இதல்ை உழவுத் தொழில் என்பது மாடும் மனிதனும் சேர்வதே என நன்கு விளங்கு கிறது. இப்பொங்கல், விழாவானது இல் வாழ்வைச் சிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/66&oldid=646852" இலிருந்து மீள்விக்கப்பட்டது