பக்கம்:வானொலியிலே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வானெலியிலே

பித்து கல் உழவைப் போற்றி, வீரத்தைப் பாராட்டுகிறது. அது மட்டுமல்ல. உழைப்பையும், வாழ்வையும், வீரத்தையும் ஒன்ருகவே பிணேத்துக் காட்டுகிறது. பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இச்சிறந்த கருத்துக்களை உள்ளமைத்து இப்பொங்கல் பெருநாளேக் கொண்டாடச் செய்த முன்னேர் களின் அருஞ்செயலே கருத்துான்றிக் கவனிக்கும்பொழுது நமது உள்ளம் மகிழ்ச்சிப் பெருக்கை அடைகிறது.

இத்திருநாளில் பொங்கல் பொங்குக ! என்று வாழ்த்துவது வழக்கம். இது பொங்கற் சோற்றை மட்டும் குறித்துக் கூறுவதல்ல. இது பல பொருள்களே உள்ளடக்கியது. பண்டைக் காலத்தில் ஒளவை மூதாட்டி சோழ மன்னனே வாழ்த்தும்போது, வரப்புயர என்று மட்டுமே வாழ்த்தினன். -

' வரப்புயர நீர் உயரும், நீர் உயர கெல் உயரும் கெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன்

உயர்வான்

என்பது அதன் பொருள். அதுபோலவே பொங்கல் பொங்குக, என்பதிலிருந்து நாடு செழிக்க வேண்டும் மழை பொழிய வேண்டும். ர்ே கிறைய வேண்டும். உரம் பெருக வேண்டும். உழைப்பு வலுக்க வேண்டும். விகளவு சிறக்க வேண்டும். வீட்டிற்கு வந்து சேரவேண்டும். மனைவி மக்கள் மகிழ்ந்து பொங்குகின்ற பொங்கல் பொங்க வேண்டும் என்று யாவுங் கூறியதாகப் பொருள்படும்.

இரண்டாம் நாள் பட்டிப் பெருக வேண்டும். பால், பானே பொங்க வேண்டும் என வாழ்த்துவார்கள். பட்டிப் பெருகினல் உரம் பெருகும் என்பதும் பால் பானே. பொங்கினல் மனைவாழ்வு பெருகும் என்பதும் கருத்து.

பொங்குதல் என்பது பெருகினல் அன்றி நிகழாது. நீர் பெருகினல் பொங்கும். பால் பெருகினல் பொங்கும். சோறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/67&oldid=646854" இலிருந்து மீள்விக்கப்பட்டது