பக்கம்:வானொலியிலே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஜப்பான் மெயின் காம்ப் !

அன்பர்களே ! உங்களிற் பலர் ஜெர்மனியின் மெயின் காம்பைப் பற்றி அறிந்திருக்கக்கூடும். ஆனால், ஜப்பா னுடைய மெயின் காம்பைப் பற்றி அறிந்திருக்க வழியே இல்லை. ஏனெனில், அது அவ்வளவு முன்னேற்பாட்டுடன் மறைவாக பாதுகாக்கப் பெற்றிருந்தது. அதன் சுருக்கத்தை உங்களுக்குச் சொல்லுவதும், அக்காட்டு அரசியற் குணஞ் செயல்களே விளக்குவதுமே இன்றைய எனது பேச்சாகும்.

தனகா மெமோரியல் என்ருலும், ஜப்பானின் மெயின் காம்ப் என்ருலும் இரண்டும் ஒன்றேயாகும். தனகா என்பவர் ஜப்பானிய ராஜ்ஜியத்தின் முதல் மந்திரியாக 1937-ல் இருந்தவர். அவர் எழுதி வைத்த அறிக்கையே தனகா ஞாபகச் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. அவ்வறிக்கையே ஜப்பானுடைய போர்க் கொள்கையாகவும், போர்த்திட்டமாகவும் விளங்குகிறது. அது சக்ரவர்த்தி மீஜி அவர்களால் ஒப்புக்கொள்ளப் பெற்று, கையாண்டு வந்து, கமக்கு விட்டுப் போயிருக்கிற திட்டமாகும் என்று மந்திரி தனகா அவர்கள் வற்புறுத்திக் கூறியிருக்கிருர்கள்.

காட்டுப்பற்று எங்கும் மிகுந்துள்ள இக்காலத்தில், தமிழ் மக்களாகிய காமும் பிறகாட்டு மக்களின் கொள்கை களேயும் திட்டங்களேயும் அறிந்துகொள்வது கலமாகும். அதிலும், இந்தியாவிற்கு விடுதலை அளிக்க உழைப்பதாகக் கூறுகிற ஜப்பானிய காட்டின் கொள்கையை அறிந்து கொள்வது பின்னும் அதிக நன்மையை உண்டாக்கும் என்பது எனது எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/69&oldid=646859" இலிருந்து மீள்விக்கப்பட்டது