பக்கம்:வானொலியிலே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பான் மெயின் காம்ப் 69

ஒருவன் தானும் தன் குடும்பமும் கல்வாழ்வு வாழ வேண்டுமென ஆசைப்படுவது கியாயமாகும். ஒரு நாடு முன்னேற்றமடைய ஆசைப்பட்டு முயற்சி செய்வதும் நீதியாகவே கருதப்படும். ஆனால், பிறரை வதைத்து, துன்புறுத்தி, அழுத்தி, நசுக்கி அதன் மூலம் வாழ எண்ணு வது அதிேயாகும். அதிலும் நேர்மையான போர் இன்றி, மறைவான திட்டங்களின் மூலம் வஞ்சனேயாக நாடு கவர்வது கொடுமையாகும். அதிலும் ஆசியாவிற்கே விடுதலை பெற வழிசொல்லித் தருகிற ஜப்பானிய அரசாங்கம் இம் மாதிரியான திட்டத்தைக் கையாள்வது பெருங் கொடுமை யாகும். அப்படிப்பட்ட அந்தத் திட்டத்தையும் கொள்கை யையும் கருத்துான்றிக் கவனிக்குமாறு வேண்டுகிறேன் :

" தமது தற்காப்பிற்காகவும், கிழக்கு ஆசியாவிலுள்ள மற்றவர்களின் துன்பங்களேயும், துயரங்களையும் போக்கு வதற்காகவும் ஜப்பான் உயிரையும் ஆயுதங்களையும் உபயோ கிக்கும் முறையை அனுசரித்தாகவேண்டும். இம்முறையை நாம் அனுசரிக்கும்போது அமெரிக்காவின் எதிர்ப்பையும் சைணுவின் சண்டையையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும். சைனுவை நமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவேண்டு மால்ை, காம் முதலில் அமெரிக்காவை அழித்து ஒழிக்க வேண்டும். சைனவுடன் போரிட்டு ஜெயிக்குமுன்னே நாம் மஞ்சூரியாவையும், மங்கோலியாவையும் ஜெயிக்கவேண்டும். உலகத்தை ஜெயிக்க முதலில் சைனவை ஜெயித்தாக வேண்டும். சைனவை ஜெயித்துவிட்டால், தென் கடல் காடுகளும், பிற ஆசிய காடுகளும் நமக்கு பயந்து நம்மிடம் சரணடைந்துவிடும்.

தொழில் என்ற முறையிலும், வர்த்தகம் என்ற முறை - யிலும் காம் மஞ்சூரியாவிற்குள்ளும், மங்கோலியாவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/70&oldid=646861" இலிருந்து மீள்விக்கப்பட்டது