பக்கம்:வானொலியிலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

வானொலியிலே

குள்ளும் நுழையவேண்டும். பின்பு அங்கு நாம் பெரிய அளவில் குடியேறவேண்டும். பிறகு அதையே தளமாக உபயோகிக்கவேண்டும். அங்கிருந்தே சைனாவின் பல பாகங்களுக்கும் பரவி, ஆங்காங்குள்ள மூலப் பொருள்களைக் கைப்பற்றித் தீரவேண்டும். இவை முடிந்த பிறகு அங்கிருந்தே இந்தியாவிற்கும், சிரியா, ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பாவில் கூட படை எடுக்கவேண்டும். இப்பொழுது ஜப்பானின் தேசிய பலம் வளர்ச்சியடைவதற்கு பரந்த நிலங்கள் அதிகமாகத் தேவையாகும்.

இத் திட்டங்கள் நிறைவேறுவதற்கு இராணுவ இலாகாவின் இரகசிய நிதியிலிருந்து 10 லட்சம் எண் செலவழிக்கவேண்டும். ஒய்வு பெற்றிருக்கிற 400 இராணுவ உத்தியோகஸ்தர்களை சைனக்காரர்களாக உரு மாற்ற வேண்டும். அவர்களை உபாத்தியாயர் தொழிலுக்கு என்று மங்கோலியாவின் உள்ளும், அதற்கு வெளியிலும் வேலே செய்ய அனுப்பி வைக்க வேண்டும். இவர்கள் மூலமாக மங்கோலிய அரசன் நம்பிக்கையை எளிதில் பெறலாம். ஜப்பானின் தேசிய நன்மைக்கும் 100 வருட காலத்திற்கு அடிகோலி விட்டதாகவும் ஆகும்.

கொரியர்கள் நமக்கு முன்பு தொந்தரவு கொடுத்து வந்தவர்கள். இப்போது அவர்களை நம்பலாம். அவர்களிற் பலரைச் சைனாவிற்குள் அனுப்பி, நிலங்களை வாங்கி, நெல் சாகுபடி செய்யும்படி செய்ய வேண்டும். இதற்கு நாம் அவர்களுக்குக் கூட்டுறவு மூலமும், ரயில்வே மூலமும் நிறையப் பொருளுதவி செய்யவேண்டும். இது நமது உணவுத் தொல்லையை அடியோடு போக்கிவிடும்.

கொரியர்கள், கலிபோர்னியாவிலும் தென் . அமெரிக் காவிலும் குடியேறியிருக்கிற ஜப்பானியர்களுக்கு மாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/71&oldid=490194" இலிருந்து மீள்விக்கப்பட்டது