பக்கம்:வானொலியிலே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜப்பான் மெயின் காம்ப்
77

மில்லே யென்றே கூறவேண்டும். அவர்களின் எண்ணம் வேறு, சொல் வேறு, செயல் வேறாகவே இருந்து வருகிறது. அவர்களின் எண்ணத்திற்கு இந்தத் திட்டமும், அவர்களின் சொல்லிற்கு அமெரிக்காவிடம் `சமாதானமே எங்கள் விருப்பம்’ என்று பேசிக்கொண்டிருந்ததும், அவர்களின் செயலுக்கு அதே சமயத்தில் ஹவாய் தீவில் வீசிய வெடி குண்டுகளும் போதுமான சான்றாக இருக்கும்.

ஜப்பானிய அகராதியில், `கொரியாவுக்கு உதவி’ என்றாலும், `மஞ்சூரியாவுக்கு ரயில் பாதை’ என்றாலும், `மங்கோலியாவுக்கு சுயராஜ்யம்’ என்றாலும், `இந்தியாவுக்கு விடுதலை’ என்றாலும், `ஆசியாவின் புணருத்தாரணம்' என்றாலும், `உலகத்திற்கு சமாதானம்’ என்றாலும் ஒரே ஒரு பொருள்தான் உண்டு. அது என்னவென்றால் ஜப்பானுக்குள் அடிமைப்பட வேண்டும் என்பதே.

வங்காள மக்களுக்காகக் கண்ணிர் வடிக்கும் ஜப்பானி யர்கள்தான் வங்காளத்தில் தொடர்ந்தாற்போல் குண்டு வீசியவர்கள் என்பதையும், தென்னிந்திய மக்களின் விடுதலையைப்பற்றிக் கூறும் ஜப்பானியர்கள்தான் விசாகப் பட்டினத்திலும், சென்னையிலும் குண்டு வீசியவர்கள் என்பதையும் நாம் மறந்துவிடவில்லை. குண்டுகள் வீசிய பிறகுதான் அவர்களுக்கு இரக்க புத்தி தோன்றியிருக்கிறது என்பதையும் நம்ப முடியவில்லை. வஞ்சக புத்தியும், கெஞ்சும் பேச்சும், நஞ்சூட்டும் செயலுமுள்ள ஜப்பானியர்களிடத்து, எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அஜாக்கிரதையாகவும் நாம் இருந்து, அவர்களின் பகற் கனவும் ஒரு காலத்தில் பலித்து, இந்தியாவும் அவர்களிடத்திற் சிக்கி விடுமானால், இந் நாடு நம்முடையது , இதை ஆளும் உரிமை நமக்குச் சொக்தம். இதை நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/78&oldid=487338" இலிருந்து மீள்விக்கப்பட்டது