பக்கம்:வானொலியிலே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந்நூலைப் பற்றிய மதிப்புரைகள்

"இத்தொகுப்பு நூல் விலையுயர்ந்த மணிகள் ஏழினைக் கொண்ட் ஒருமாலை யெனில் மிகையாகாது. எங்கும் ஆழ்ந்த கருத்துக்கள் விரவி கிடக்கின்றன...... அரிய கருத்துக்களை அறியவேண்டும் என்ற ஆர்வமும், எளிய தமிழ் நடையின் அழகைப் பருகவேண்டுமென்ற ஆசையும் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்”

-எங்கள் நாடு (12-6-49)

"திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் அரசியல் பேச்சு ஒன்று, ஆராய்ச்சிப் பேச்சு ஒன்று, சமூகப் பேச்சு ஒன்று, விவாதப் பேச்சு ஒன்று, வியாபாரப் பேச்சு ஒன்று, வெளிநாட்டுப் பேச்சு என்று ஆக ஏழு சிறந்த வானோலிப் பேச்சுக்களைத் தேர்ந்தெடுத்து அழகிய நூல் வடிவாக அச்சியற்றப் பெற்றுள்ளது.”

-

தமிழர் நாடு (14-12-147)

”நல்ல விறுவிறுப்பான நடையில் தெளிவாக விஷயங்களை அலசி ஆராய்ந்து எடுத்து உரைத்திருக்கிறார் ஆசிரியர்” '

-தினசரி மடல் (27.5-48)

பேச்சுக்கலை பயிலும் இளைஞர் கரத்தில் எல்லாம் தங்கும் உரிமையும் பெருமையும் இந்நூலுக்கு உண்டு.”

-போர்வாள் (6-8-48)

பொருட் செறிவுடனும் நகைச் சுவையுடனும் பேசுவது அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்தின் தனிச் சிறப்பு...... கல்லூரி மாணவர்கட்குப் பயனற்ற புத்தகங்களை வைக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் கண்ணுக்கு இப்புத்தகம் படுமா ?”

-பொன்னி (டிசம்பர், 1947 இதழ்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/8&oldid=486571" இலிருந்து மீள்விக்கப்பட்டது