பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அனைவரிடத்தும் அன்பு காலையிலே கண்விழிக்கிருேம். காரிருளில், கண்ணுறக்கத் தில் நம்மைக் காத்திருந்த இறைவனுக்கு நன்றி சொல்கி ருேம். துங்கும் போது மூச்சு போல்ை நாமென்ன செய்ய முடியும்? ஆகவே நம் ஜீவனைக் காத்து வாழ்வைத் தருகின்ற ஆண்டவணை வாழ்த்துகிருேம், வணங்குகிருேம். சாகாமல் வாழ்ந்துவிட நாம் எத்தனை எத்தனை சாகசங், களை மேற்கொள்ளுகின்ருேம். ஆசை, . எத்தனைப் பேராசை நமக்கு இந்த உலகத் தில் எப்பொழுதும் வாழ்ந்திருக்க அவ்வளவு ஆசை ஏன்? ஒரு முறை உயிர் போனுல் மீண்டும். வருமா? எல்லா உயிரினங்களுக்கும் இந்த ஆசை பொருந்துமே! ஏன் பிறந்தோம் நாம் என்று எப்பொழுதாவது தான் நம்மை தாமே கேட்கிருேம் . ஆல்ை, எப்படியும் வாழ்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் வாழ்க்கைப் போராட்டம் இருக்கிறது. மாயமாக மறைகின்ற உயிரைக்காக்க ஓர் மரணப் போராட்டப் மர்மமாக நமக்குள்ளே நட க்கிறது. அது ஓயாத போராட்டம். இந்தப் போராட்டத்தில் எல்லா ஜீவ ராசிகளும் பங்கு பெறுகின்றன. எது ஆற்றல் உள்ளதோ, அது கொன்று வென்று விடுகிறது. ஆற்றல் இல்லாத உயிரி