பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 உடல் உறுப்புக்களின் ஒவ்வொரு இயக்கமும் விளே பாட்டின் இயக்கமே. விளையாட்டின் இயக்கம் எல்லாம் வாழ்க்கையை வளம் பெற வைக்கின்ற இயக்கமே யாகும். உடல் நலத்தை வைத்துத்தான் உலக வாழ்க்கையே அமைந்திருக்கிறது. ஆண் மை மிக்க உடல் அமைந்தவர்கள் தான் மேன்மைமிக்கவர்களாக சமுதாயத்தில் வாழ்கின் ருர்கள். சக்தி மிக்க உடல் என்பது உடல் சக்தியும் மூளைசக்தியும் கொண்டது தான். மூளையும் ஓர் உடலுறுப்புத்தானே ! பலம் மிகுந்த உடலில் தான், பாங்கு ற சிந்திக்கின் மூளையும் பலத்துடன் அமையும் . உடலால் உழைக்கின்ற மக்களும், சிந்திக்கின்ற மக்களும் தான் சமுதா த்திற்கு எப்பொழுதுமே தேவைப்படுகின் ருர்கள் . இப்படி இரண்டு வகையான மக்களேப் பிரித்து பார்க்காமல், ஒரே வகை மக்களாக, உடலாலும் மூளேயாலும நன்குவளர்ச்சி பெற்ற மக்களை உருவாககுவது தான் விளையாட்டுக்களின் தனிப் பண்புகள கும். # சமுதாயத்தை உருவாக்கும் சக்தி வாய்ந்த மக்களே, நாம் இ ளமையிலிருந்தே இனம் கண்டு கொள்ள வேண்டும். குழந்தைகளை வைத்துத்தான் இனியதோர் எதிர்காலத்தைத் திறப்பட உருவாக்க முடியும். இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான், குழந்தை களுக்கம் விளையாட்டைக் கற்பிக்க வேண்டும் என்ற எண்ண எழுச்சி இன்று எல்லோரிடையேயும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை அசைவற்றுக் கிடக்கிாது என்ருல், அது நோய்வாய்ப் பட்டிருக்க வேண்டும். அல்லது இறந்திருக்க வேண்டும் என்கிருர் ஒரு மேல் நாட்டறிஞர். في . o