பக்கம்:வாய்மொழி இலக்கியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மேலே நாட்டு அறிஞர்கள் பலர் இந்த நாடோடி இலக்கி யங்களே ஆராய்ந்து ஆராய்ந்து அவை அந்நாட்டு மங்காக செல்வங்கள்ாத வாழ வேண்டிய தேவையை வற்புறுத்திச் செல்லுகின்றனர். பரந்த பாரத நாட்டிலும் தற்போது இவ்வுணர்ச்சி தலைநிமிர்ந்துள்ளது. அரசாங்கம் இத் துறையில் கருத்திருத்திச் செயலாற்றி வருவதுடன், தமிழ் நாட்டில் பல தனிப்பட்ட அறிஞர்களும் இத் துறைவழிச் செயலாற்றி நல்ல தொண்டு செய்து வருகின்றனர். அவர் கள் வழியே சில நல்ல தமிழ் நூல்களும் இன்று நம்மிடை வாழ்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்பு நேர்ந்த பொழுதுதான் எனக்கு இந்நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை வானெலி நிலை யத்தார் வாய்மொழி இலக்கியம்' பற்றிப் பேச வேண்டு மென விரும்பினர். அதுபோது உள்ளத்தே ஆய்வு எழுங் தது. இக்காலத்தில் தொகுக்கப் பெற்ற சில நாடோடிப் பாடல்களையும் கண்டேன். அப்படியே என்னைக் காலம் பின்னே ஈர்த்துச் சென்றது. தொல்காப்பியரையும் தாண் டிச் சென்று விட்டேன் என எண்ணுகின்றேன். ஆம்|இந்த நாடோடி இலக்கியம் இன்று நேற்று உருப்பெற்றதன்று. வரையறுத்த இலக்கிய நெறியும் இலக்கண மரபும் தோன் றுவதற்குப் பன்னெடுங்காலத்துக்கு முன்பே-ஏன்?ஏட்டில் எழுத்து உருப்பெறு முன்பே இந்த வாய்மொழி இலக்கியம் உருவாயிற்று என்று கொள்ளுதல் பொருங் தும். அத்துணைப் பழமை வாய்ந்து பழையதினும் பழையது மாய் விளங்கும் இவ்வாய்மொழி, இன்று ‘புதியதினும் புதியதாய் மெருகேற்றப் பெற்று மிளிறும் கிலேயைப் பெற். றுள்ளது. தொல்காப்பியருக்கு முன்பிருந்து வாழ்ந்த வாய்மொழி இலக்கியங்களே அவர் தொட்டுக் காட்டிச் சுட்டி விளக்கியுள்ளனர். அன்று தொடங்கி இன்று