பக்கம்:வாய்மொழி இலக்கியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கல்லா மாக்கள் வாழும் இடங்களைக் கண்டு-அவர்களைப் பாட வைத்து, அப்பாடல்களேயெல்லாம் தொகுத்து வெளி யிட்டுள்ளனர். அவற்றுள் ஒரு சிலவற்றிலிருந்தே சில பாடல்களே நான் எடுத்துக் காட்டியுள்ளேன். அந்நூல் களின் பெயர்களையும் ஆங்காங்கே குறித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி உரித்தாகுக. கடைசிப் பகுதியில் எனது கிராமத்தும் அதன் சுற்றுப் பக்கத்திலும் வழங்கும் சில பாடல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். அவற்றை உதவியவருக்கும் நன்றி. இந்நூல் தொல்காப்பியர் காலத்துக்கு முன் தொடங்கி இன்று வரை உள்ள வாய்மொழி இலக்கிய" மரபினே ஒருவாறு காட்டுகின்றதெனினும், இதில் நான் எல்லாவற்றையும் விளக்கி விட்டேன் என்று கூற முடி யாது. எனவே இதைக் காணும் அன்பர்கள் தத்தம் கருத் துக்களைத் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு அடுத்துவரும் பதிப்புக்களில் தக்கன வற்றை ஏற்று வெளியிடவும் வாய்ப்பாகும். இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் என் நன்றி. தமிழ்க்கலை இல்லம் பணிவுள்ள, சென்னை-30 1-12-64. } அ. மு. பரமசிவானந்தம்