பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாசிரியர் உரை காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் கவிச்செம்மல் டாக்டர். ரெ. முத்துக்கணேசனார் தம் பெயரில் அமைத்துள்ள தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவை 1998 பிப்பிரவரியில் நிகழ்த்த வேண்டுமென அக்கல்லூரியினர் என்னை விரும்பிக் கேட்டபோது மகிழ்ந்தேன், இசைவும் தந்தேன். வாழும் கவிஞர்களின் கவிதைகளைத் திறனாய்வு செய்யவேண்டுமென்ற என் நெடுநாளைய உணர்வுக்கு இவ்வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதனால் திறனாய்வு நோக்கில் வாழும் கவிஞர்களின் கவிதைகள் என்ற பொருளில் மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பதாகப் பிரித்துக் கொண்டு கவிஞர்களின் படைப்புக்களைத் திரட்டினேன். அவைகளில் அள்ள அள்ளக் குறையா அற்புதங்களைக் கண்டு களித்தேன். நான் இன்புற்றதை உலகின்புறச் செய்யவிரும்பி அறக்கட்டளைச் சொற்பொழிவாக உரையாற்றியதோடு அவ்வறக்கட்டளை விதிப்படி"வாழும் கவிஞர்கள்" என்ற தலைப்பில் நூலாக எழுதியும் தந்தேன். நூலின் ஒருபகுதி (மரபுக்கவிஞர்கள்) இராமசாமி தமிழ்க்கல்லூரியினரின் மெய்யம்மை பதிப்பகத்தாரால் அச்சாகி வெளிவருவது கண்டு மகிழ்கின்றேன். இந்நூல் வெளிவரக் காரணமாயிருந்த என் அரியநண்பர் கவிஞர் ரெ. முத்துக்கனேசருக்கும் தமிழ்க்கல்லூரித் தலைவர் பெரி. பெரியகருப்பன், செயலர் பெரி. வீரப்பன் ஆகியோர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியேன்பால் பெரிதும் கருணை கூர்ந்து அன்பு பாராட்டும்