பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வாழும் கவிஞர்கள் ஞானத் தமிழ் என்ற தலைப்பில் திருமுறை. பூதத்தாழ்வார். பட்டினத்தார். அருணகிரியார் குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்கர் இவர்கள் கவிஞர் முடியரசன், பாவலர்மணி ஆபழநி இவர்கள் கவியரங்கப்பாடல்களால் புகழ்பெற்றதுபோல்டாக்டர் முத்துகணேசனும் தம் கவியரங்கப் பாடல்களால் மிகுபுகழ் பெற்றுள்ளார். கம்பன் திருநாள் 203.1962 கவியரங்கத்தில் திருமுடிப் பெருமை என்ற தலைப்பில் பாடியவற்றுள் சில. கோலமான் வண்ணத்தைக் குறிஞ்சிப் பூவைக் கூடுபனி, நீர்ப்புனலை அன்பைத் தேனை நீலவான் பேரழகை உண்மைக் கற்பை நெறிமுறையை அரசியலை அறத்தை யெல்லாம் ஆலமா மரம்போலக் கம்ப நாடன் ஆயிரமாயிரங்கவியாய் அமைத்த வளித்தான் ஞாலமார் தமிழ்முடியாய் இராம காதை நற்றமிழ்த்தாய் சூடிவரும் முடியே யன்றோ இது தமிழ் முடியைக் காட்டும் அற்புதமான பாடல். இப்பாடலின் கம்பீரம் கம்பன் பாடலின் கம்பீரத்தை ஒப்ப அமைந்துள்ளது. இதன் சொல்வளமும், அது நம்முள்ளத்தில் எழுப்பும் கற்பனை கலந்த கருத்து வளமும் நம்முள்ளத்தில் மகிழ்ச்சியைப் பொங்க வைக்கின்றன. உலகங்கள் பலப்பலவாய் வாழ்ந்திட் டாலும் ஒருகுடைக்கீழ் ஆட்சியிலே நிலைத்திட் டாலும் இலகுபுகழ்க் காராளர் இருகை பார்த்தே இயங்கியிடல் வேண்டுமென்றான் கவிதைக் கம்பன் திலகமெனும் நிலத்தாயின் வயல்கள் ஊடே திகழ்கின்ற நாற்றுமுடி யன்றோ மன்னர் குலமுடியிற் கொண்டிழைத்த முடியே யாகும் குலச்சடையன் கொடைமுடிபோல் தளிர்க்கு மாலோ! இது கம்பன் ೩ಅಟ್ಕಿ நாட்டு வளத்தை நாற்று முடி என்ற சொற்றொடர் கடைசியரின் பூ முடித்த தலைமுடியை நினைக்கச் செய்கின்றது.அதுமட்டுமா? சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று கூறிய வள்ளுவரையும் நம் மனத்திரையில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. மன்னர் முடியும் நாற்று முடியின் அடிப்படையின் கீழன்றோ