பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 87 அமைந்துள்ளது என்ற கருத்தைச் சுட்டியுரைத்துக் குலச் சடையன் கொடைமுடியையும் நன்றியுடன் நினைக்கச் செய்கின்றது. இவற்றையெலாம் மின்னல்போல் காட்டும் டாக்டர் முத்துக் கணேசனாருக்கும் தமிழ்ப்புலமைமுடியைச் சூட்டி நம்மை மகிழ்விக் கின்றது. - இங்கு கவிஞர் ஆறு பாடல்களில் கருத்து முடி என்ற தலைப்பில் கோடி கோடியாகத் திருமுடிகளைக் காட்டுகின்றார். இப்பாடல்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒருபடித் தேனாக இனிக்க வைக்கின்றன. பூமாலை உடல்புரளப் பூக்கள் சூடிப் பொய்ப்பெண்தான் உடல்காட்டி நடன மாடப் பாமாலை இசைதொடுத்தே பக்கம் நின்று பைங்கொடியாம் பெண்ணொருத்திப் பாட்டுப் பாடல் காமாலைக் கண்ணுடைய மன்னர் பல்லோர் கணிகையர்தம் திருவடியில் மயங்கி நிற்க நாமேலே இருத்தலாகா தெனநினைந்தே நைந்திழிந்த திருமுடிகள் கோடி! கோடி! இதில்வரும் கற்பனைக் காட்சிகள் நம் மனத்திரையில் விழும்போது அவை நாம் வெள்ளித் திரையில் விழுந்தாற் போல் கண்டு அநுபவிக்கிறோம். இன்னொரு பாடல், நிலம்பூத்த மலர்க்கூட்டம் சிதைவு றாமல் நீளுறுப்பால் தேனெடுக்கும் தேனி போலக் குலம்பூத்த வாழ்விருக்க வளமை உண்னும் குள்ளநரி தந்திரத்தார் அமைச்ச ருண்டு நலம்பூத்த நல்லோராய்க் கையில் சிக்கி நற்பதுமை மன்னரென வாழ்ந்தோர் பல்லோர் தலம்பூக்க வழியின்றித் தலையில் நின்றே தவித்திட்ட திருமுடிகள் கோடி ! கோடி! இதில்வரும் உவமைகள் அற்புதம், நரித் தந்திரமுடைய அமைச்சர்கள், பொம்மை அரசர்கள், கையாலாகாத மன்னர்கள் இவர்களைக் காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கும் கணேசனாரின் கவியுள்ளம் வாழ்க, பிறிதோர் பாட்டில்