பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:x : *; i r: : ைேர்:: 88 வாழும் கவஞாகள வாய்திறந்த மன்னர்வாய் மூடு முன்னர் வழக்கமாய் ஆம்போடும் பேர்கள் கூடிப் பேய்வளர ஆட்சிசெயும் மன்னர் மாட்டே பேறிழந்து விழிக்கின்ற முடிகள் கோடி என்று விசித்திரமான மன்னர்கள் கூட்டத்தைக் காட்டுகின்றார். பண்புகளையெல்லாம் பல்வேறு முடிகளாகக் காட்டும் பாங்கினையுடைய பாட்டாக ஒன்றைக் காண்போம். நோய்பெருகும் துன்புடைய உள்ளம் மாற நுண்ணகத்தின் அன்புமோர் முடியே யன்றோ தேய்புகழின் செயலுடையார் நட்பு மாறச் சேயுளத்துப் பண்புமோர் முடியே யன்றோ காய்மையின்றி மக்களுயிர் காத்துத் தாங்கும் காவலனின் நல்லுடலும் முடியே யன்றோ தாய்மைநிகர் பொறையுடமை கொண்ட வாழ்வு தனிமுடியா யிலங்குமொரு முடியே காணிர் இங்கு அன்பு, பண்பு, நல்லுடல், பொறையுடைமை ஆகிய பண்புகளையெல்லாம் முடியாக்கி மகிழ்கின்றர். இத்தனை பண்புகளையுடைய கவிஞரோ ஒரு தங்க முடியைக் கொண்டவர் என்று நாம் எண்ணுகின்றோம். முத்தாய்ப்பாக ஓர் முடியைக் காட்டுகின்றார்கவிஞர். அதுதான் 'கம்பன் முடி என்ற ஓர் அற்புதமான மணிமுடி இந்த முடியில் பதிக்கப் பெற்றிருக்கும் நவமணிகளைக் காட்டுகின்றார் கவிஞர். பாட்டையும் அதில் பதிக்கப் பெற்றிருக்கும் கற்களையும் காண்போம். மருவினிய உயிர்க்காதல் பச்சை தோன்றும் மலர்கின்ற நட்புருவாய் மணிகள் தோன்றும் உருவளரும் பேரறிவாம் வைரம் தோன்றும் ஒளிர்கின்ற நல்லுறவாய் நீலம் தோன்றும் திருவழகு தமிழ்க்கவிதை முத்தாய்த் தோன்றும் திகழ்கின்ற அறவடிவாய்ப் பவளம் போன்றும் ஒருநிலவாய் ஒண்சுடராய்க் கலைகள் தோன்றும் உயர்கம்பன் திருமுடியின் கற்கள் அம்மா! பாட்டில் எப்படிக் கற்கள் ஒளி விடுகின்றன பாருங்கள்.