பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} வாழும் கவிஞர்கள் விரும்புகின்ற மக்கள்.வாழ் இக்கா லத்தே விழைகாமம் பொழுதறியின் பொய்யே என்ற பெரும்புலமைத் தமிழ்வல்ல அள்ளுர் முல்லைப் பேராசான் அக்ப்பொருளும் பொன்னே யன்றோ ! என்ற அரிய பாடலின் வாயிலாக நினைவு கூர்கின்றார். முளைமதியில் ஒதுப்புறத்தே காண்பார் கண்ணில் முழுநேர வேலைக்கே ஏகும் சந்தில் விளைகதிரை அறுக்குங்கால் வேலி யோரம் விளையாடி மகிழ்கின்ற புன்சி ரிப்பில் தளையவிழும் வெண்பூக்கள் தலையிற் றாங்கித் தளிர்நடையில் ஆண்மகனை நோக்கும் போது விளைகின்ற ஆசைக்கே காமம் என்று விதிவகுக்கும் நாவல்கள் கோடி! கோடி..! புதினங்கள் காட்டும் காமத்தைத் தெரிவிப்பது இப்பாடல். புதினங்கள்' இருப்பவற்றைக் காட்டுகின்றனவே தவிர இருக்க வேண்டியவற்றைக் காட்டவில்லை. இருக்கின்ற மனையாளின் எண்ணம் ஒரார் எழுந்துவரும் தன்னாசை உந்த லாலே கருக்கொள்ளும் நினைவுக்கைப் பாவை யாகிக் காமப்பொய் தருசுகமே காப்பர் ஆண்கள் உருக்கொண்ட வாளொக்கும் கண்ணாள் நாளும் உள்ளத்தைத் தொட்டிழுக்கச் சொத்தி முந்து தெருக்கொண்டு திரிகின்ற காமப் பித்தர் தெளிஞானச் சித்தர்போல் அலைவார் கோடி! இப்பாடலில் இக்காலச் செழிப்புடன் குபேரர்கள்போல் வாழும் சில இளைஞர்கள் ஒழுக்கக் கேட்டினால் குசேலர்களாகத் தள்ளப்பெறும் இழிநிலையைச் சித்தரித்துக் காட்டுகின்றார். இப்பாடல் இளைஞர் உலகைத் தெருட்டும் கவிதையாகவும் அமைகின்றது. அரிசிக்கும் ஆடைக்கும் அல்லற் பட்டே அவையடையக் காமவலை வீசிப் பின்னர் மருவியவள் பொருள்கவர்ந்து எட்டிக் காயாய் மறுகணத்தே வெறுத்தொதுக்கும் கயவர் உண்டு