பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 93 என்ற நூற்பாவால் பெற வைத்தார். நாகரிகமடைந்த மனிதன் இந்த இணைப்பு நடைபெறுவதற்கு ஊழைக் காரணமாக்கினான். இதற்கும் தொல்காப்பியர், ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்று நூற்பா அமைத்துக் காட்டியுள்ளார். இதை உரையாளர்கள் "இவனும் பதினாறாட்டைப் பிராயத்தானாய் இவளும் பன்னீரட்டைப் பிராயத்தாளாய் ஊழ் கூட்டுவிக்கக் கூடுதல்" என்பர்.இது நாடக வாழக்கு நடைமுறையில் இது நடைபெறுவதில்லை. இந்த வயதில் இருவருக்கும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. குழந்தை பெறுவதற்கு ஏற்ற உள்ளுறுப்புகளும் முதிர்ச்சி அடைவதில்லை. அதனால்தான் நற்றாய் தடையாக நிற்கின்றாள். தோழி பக்குவம் அறிந்து இணைய வைக்கின்றாள். இந்த இணைப்புக்கு மதனவேளையும். மலர்க்கணைகளையும் படைத்து அவற்றின் செயற்பாட்டினால் காதலுணர்வு உண்டாவதாக நம் முன்னோர் புராண வாயிலாக விளக்குவர். இன்று பெண்ணுக்குத் திருமண வயது 21 என்று விளம்பரமும் செய்யப் பெறுகின்றது. உள்ளுறுப்புகள் அப்பொழுதுதான் தயார் நிலையில் உள்ளன என்பது இதன் பொருள். இத்துடன் இது நிற்க. இறுதியாகக் கவிஞர், உயிரினொடு உயிர்சேரும் உணர்வே காமம் ஒருபோதும் பிரிவறியா உறவே காமம் பயில்கின்ற கலைஞானப் பண்பே காமம் பண்போடு கலந்துவரும் பாட்டே காமம் அயலின்றி ஆட்கொள்ளும் அழகே காமம் அறமாகி நெஞ்சளிக்கும் அன்பே காமம் செயலொன்றும் அருள்மோனத் தவமே காமம் சித்தத்தில் நன்றாகும் காமம் மெய்யே என்று மெய்யான காமத்தை விளக்குவார் கவிச்செம்மல். பழங்காலத்தில் காமம் என்ற சொல் நற்பொருளில்தான் வழங்கப் பெற்றது. வள்ளுவரின் காமத்துப்பால் என்பது இதற்குச் சான்று. இன்று காமம் என்று தவறான பொருளில் வழங்க, காதல் என்பது அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு நற்பொருளில் வழங்கி வருகின்றது.