பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 வாழும் கவிஞர்கள் இந்து மதாபிமான சங்கத்தில் நடைபெற்ற பாரதி விழாக் கவியரங்கில் 191961 கண்ணன் பாட்டு என்ற தலைப்பில் பாடிய கவிதைகளும் அற்புதமாக அமைந்துளளன. கண்ணன் என் காதலி என்ற தலைப்பில் அற்புதமான பாடல்கள் உள்ளன. பாரதி காட்டும் காதலியைக் காட்டும் கவிஞர், நறுஞ்சாந்தம் துளியளவே மணக்கு மாபோல் யாவருக்கும் விளங்கிடவே காதல் தன்னை யாத்துரைத்தான் சிலசொல்லில் புலவன் கேளிர் என்று தொடங்கி விளக்கத் தொடங்குகின்றார். அதில் ஒரு பாடல், தோய்கின்ற மதுவாகித் தும்பி யாகித் துணையாகி அமுதாகி வீணை யாகி வேய்க்குழலில் பிறக்கின்ற நாத மாகி விளைகின்ற காதலினை உயிரை அன்பை ஆயிரமாய்க் கதைவழுதிச் சொல்லப் போமோ அளப்பரிய காதலினை வாழ்வி னுக்கே பயிரமாய் வகுத்துரைத்தான் கண்ணன் பாட்டில் பாரதியார்க் கிவ்வுலவில் ஈடோ சொல்வீர். கண்ணன் என் காதலி என்ற தலைப்பில் பாரதி ஆறு பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் பாயும் ஒளி நீ எனக்கு என்ற பாடலைக் கணேசனார் கவிதை ஆடியில் உருவம் போல் காட்டுகின்றது. 'கண்ணன் என் தாய் என்ற தலைப்பில் பாரதியார் ஓர் அற்புதமான பாடலைப் பாடியுள்ளார். அதனைக் காட்டும் நம் கவிஞர் மருமகளை மகன்கூட்டி வெளியிற் சென்றால் மாமியார் பொறாமையால் இடிந்து நிற்பாள் இருவருமே காதலொடு சிரித்துப் பேசில் இக்குடும்பம் உருப்படுமோ என்று ரைப்பாள் விருப்பமொடு பொருள்வாங்கிக் கொடுத்திட் டாலோ விளைந்துவிடும் பெருஞ்சண்டை போதும் தாயாம் திருப்பெயரைத் தாங்கிநிற்கும் பெண்கள் உண்டு தேன்கவிஞன் பாரதியின் தாய்மை கேளிர். என்ற பீடிகை போடுகின்றார். பின்னர்.