பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 95 ஒன்றான வாய்மைக்கே வடிவ மாவாள் உள்ளன்பால் பிறவுயிரைக் காத்து நிற்பாள் நன்றாக மங்கையொரு பாக னாக நானிருக்கும் காதலினைக் கண்டு வப்பாள் பொன்றாத புகழ்க்கதையால் ஞானச் சொல்லால் புத்தமுத அறிவுரையால் எனைவ ளர்ப்பாள் நின்றாள வந்துதித்த தெய்வம் தாய்தான் நீள்நிலத்தே கண்ணனெனப் போற்று கென்றான். என்று கண்ணன் காட்டும் தாயைக் காட்டுவர். பாரதியின் கண்ணன் பாட்டில், கண்ணன் என் தாய், கண்ணன் என் சேவகன் என்ற இரண்டும் மிக மிக அற்புதமானவை.உண்ண உண்ணத் தெவிட்டாத உணவு எனும் முலைப்பால் ஊட்டிய அன்னை, சற்று வளர்ந்த பின்னர் - பேச்சு மொழி கற்ற பின்னர் குழந்தையை மடியிற் கிடத்திய வண்ணம் சந்திரன் முதலிய புறவுலகைக் காட்சிகளைக் காட்டுவாள். உளவியல் கற்ற ஆசிரியைபோல் அவள் வகுத்த பாடத்திட்டம்போல் பல காட்சிகளைக் காட்டுவது மிக மிக அற்புதம், படித்துப் படித்து மகிழ வேண்டியவை. சாத்திரம் கோடி வைத்தாள் - அவை தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே கோத்தபொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும் முத்தவர் பொய்ந்நகையும் - இன மூவர்தம் கவலையும் அவள்புனைந்தாள் என்ற பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் இலட்சம் பெறக் கூடியது என்று சொல்லலாம். நம் நாட்டில் இயற்கை பற்றிப்பாடாத கவிஞர்களே இல்லை. சங்க இலக்கியங்கள், முற்கால, பிற்காலக் காவியங்கள் முதல் பாரதிபாரதிதாசன் வரை இயற்கை என்ற பொருள் சிறப்பிடம் பெற்றுள்ளது. பாரதி தாசன் அழகின் சிரிப்பு என்ற நூல் சொல்லின் செல்வர் அறிஞர் அண்ணாவின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது என்ற உண்மை நான் விடாமல் தொடர்ந்து கேட்ட மேடைப் பேச்சிலிருந்து தெரிய வந்தது. டாக்டர் முத்துக் கணேசனாரின் இயற்கை பற்றிய பாடல்கள் பாவேந்தரின் அழகின் சிரிப்பு போல் அமைந்துள்ளது என்று சொல்லலாம்.