பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 97 ஞாலத்தில் குற்றங் காண்கில் நவிலொணாப் புயலாய் நின்று கோலத்தைக் காட்டிப் பின்பு குளிர்தவழ் தென்ற லாவாய் சீலத்தை உன்றன் சீரை யாவரே செப்ப வல்லார் இந்தப் பாடலில் தென்றல் வாடையாகவும், புயலாகவும் மாறும் பாங்கையும், பின் தன் இயல்பான தென்றலாக நிற்கும் பண்பையும் காட்டுதல் கவிஞரின் சிந்திக்கும் திறனைக் காட்டுகின்றது. இவ்விடத்தில் பாவேந்தர் பாடிய தென்றல் பற்றிய பாடலொன்றை நினைவு கூர்கின்றோம். உலைத்தீயை ஊது கின்றாய் உலைத்தீயில் உருகும் கொல்லன் மலைத்தோளில் உனது தோளும் மார்பினில் உன்பூ மார்பும் சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய் பெண்கள் விலக்காத உடையை நீபோய் விலக்கினும் விலக்கார் உன்னை ! தென்றலின் பல செயல்களை விளக்கும் போக்கில் அதன் குறும்பாகப் பெண்களின் ஆடையை விலக்குவதையும் காட்டுவார். இப்பாடலை அறிஞர் அண்ணா பல மேடைகளில் கூறிக் கேட்போரை மகிழ்வித்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது. டாக்டர் கணேசனாரின் கடல், மலை, மழை, மின்மினி பற்றிய கவிதைகள் யாவும் அற்புதமானவை. ஆசைபற்றி அறையலுற்றேன் என்று கம்பநாடன் கூறுவது போல் மின்மினியைக் காட்டுவேன். கண்ணில் துளும்பும் காமம்போல் காலை நீங்கும் கங்குல்போல் விண்ணில் நிகழும் மின்னல்போல் வீறிட்டலறும் வெறுமைபோல் மின்மினி யொன்று மின்னுதுபார் - அதோ மின்மினி யொன்றுமின்னுதுபார்