பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வாழும் கவிஞர்கள் இந்தப் பாடலில் ஒரு மின்மினிப் பூச்சியை அற்புதமாகக் காட்டுகின்ற வதும் உவமைகள் நான்கும் கவிஞரின் நுண்மா துழைபுலத்தைக் காட்டுகின்றன. இந்திய ஞானச் சுடர்கள் என்ற கவிதை நூல் அற்புதமான மாநிலம் வாரியாகப் பிரித்துக் கொண்டு அங்குத் தோன்று பெரியார்களை ஞானச் சுடர்களை நினைவுகூர நமக்குக் கவிதை மூல அறிமுகம் செய்வது சிறந்த முறை, முப்பது மாமணிகளை இவ்வ அறிமுகம் செய்கின்றார். இவர்கள்புத்தர் முதல் இரமணர் முடிய முப்பு பெரியார்கள். அற்புதமான கவிதைத் தொகுப்பு. அருமையா அறிமுகங்கள். சுந்தர மூர்த்தி அடியையொட்டி இவரும் தே: தொண்டர்கள், சமயப் பெரியார்கள், சான்றோர்கள், பெருமக்கள் ஆகி பலரையும் பாட்டால் போற்றிப் பரவியுள்ளார். கவிமணி போல் பல. இரங்கற் பாவால் பரவியுள்ளார். அன்னை பற்றி எழுந்த பாடல்கள் அன்னை அஞ்சலி என் தலைப்பில் வெளிவந்துள்ளன. அன்னை மீதுள்ள பாசம் எவரைய விட்ட பாடில்லை. முற்றும் துறந்த பட்டித்தடிகளும், ஆதி சங்கரரு இதற்கு விதிவிலக்கு இல்லை. கவியரசு கண்ணதாசனைப் பற்றி இரங்கற்பாக்கள் பலபல. எண்ணக் குழல்கொண்டே இச்சை உணர்வுகளை வண்ணத் தமிழமுதில் வார்த்தெடுத்தோன் - பண்ணார் கன்னற் கவியாளன் கண்ணதாசன்குரலை என்றுநாம் கேட்போம் இனி. முல்லைப் சிரிப்பாளன் முத்தாய்த் திரைப்படத்தே சொல்லை உருக்கிச் சுவைசேர்த்து - நல்லிசைப்பா குன்றெனவே பாடிக் குவித்தான் இசைத்தமிழை என்றுநாம் கேட்போம் இனி. அரசுக் கவியாகி ஆக்கல் பணியால் முரசுகொட்டி வாழ்ந்த முதல்வன் - விரசுபுகழ் சென்றுசேர் வேந்தனவன் செந்தேன் பொழிகவியை என்றுநாம் கேட்போம் இனி. கம்பன் அடிப்பொடி சா.கணேசன் பற்றிய இரங்கற் பாக்கள் சில.