பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t{x} வாழும் கவிஞர்கள் வந்துலகில் தோன்றுமுயிர் வாழ்விலெல்லாம் உடனுறைந்து துன்பம் நீக்கி அந்தமிலாப் பேரின்பம் அளித்திங்குக் காக்கின்ற சிவனை எண்ணிச் சிந்தைதனில் திருமுறையோ டைந்தெழுத்தை இணைந்திங்குச் செயமே செய்யும் தந்தையவன் சிவமணியாம் சொக்கலிங்கன் திருப்பூசை நலங்கள் வாழ்க இந்த மூன்று பாடல்களால் சிவம் பெருக்கும் சீலரை சொல்லோவியமாய்க் காட்டும் கவிச் செம்மலின் திறனை மெச்சுகின்றோம். சுருக்கமாகச் சொன்னால் டாக்டர்.ரெ.முத்துக் கணேசன் சத்துவ குணத்தர், அமைதியான போக்குடையவர். வாழ்க்கையில் வசதி படைத்தவர், கவிதை உள்ளம் படைத்தவர்.இலக்கிய வாழ்வையே இன்ட வாழ்வாகக் கொண்டவர். இன்று வாழும் கவிஞர்களில் முன்வரிசையில் திகழ்பவர் என்று பதிய வைக்கலாம். இவரைப் பற்றி நான் 1950 இல் காரைக்குடி நண்பர்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள குறிப்பை அப்படியே தருகிறேன். “கல்லுக்கட்டி மேற்கு ரெ. முத்துக்கணேசன் என்ற தனவைசிய இளைஞருடன் அறிமுகம் ஆனேன். நல்ல தமிழ் ஆர்வலர். கவிபாடும் ஆற்றல் வாய்ந்தவர். சிறு சிறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார் இவர் எளிய நடையில் உரை எழுதி வெளியிட்ட முத்தொள்ளாயிரம் என்ற பதிப்பு மிகவும் தரமானது. சதா தமிழ்ப் புலவர்கள் சூழ இருப்பவர் இவருடன் உரையாடிக் கொண்டிருப்பது நல்ல பொழுது போக்காக இருக்கும். பேச்சில் பொதுவாக நாட்டு நடப்புகள் பங்கு பெற்றாலும் இலக்கியம் பற்றிய குறிப்புகளே அதிகமாக இடம்பெறும். இவரிடம் உள்ள நூலகத்தில் பல அரிய நூல்கள் இடம்பெற்றுள்ளன. :