பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வாழும் கவிஞர்கள் முறையாகப் பயின்ற புலவர்களையும் வியக்க வைக்கின்றது. இவர்த கவிதைகள் மரபு சார்ந்தவைகள் ஆயினும், அவை புதுமையான கருத் புத்தம் புதிய சிந்தனைகள் ஆகியவை நிறைந்து தமிழ்க் கவிதைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்ப்பவையாக அமைந்து திகழ்கின்றன. அறிமுகம் என்னும் தலைப்பிலுள்ள கவிதையில் பாவலன் அல்லன்நான் பாவல னாகிவிடும் ஆவலும் இல்லேன் அறிவியற் கலைகளில் வல்லமை எய்தவும் வளர்தமிழ் வழியதைச் சொல்லவும் விழைந்த தொண்டன் யான்என் கருத்தின் முழுமையும் கருதிய கோள்வழி இருந்திடவிடாது எழில்தமிழ்க் கவிமகள் தன்வழி ஈர்த்தனள் தயங்கினன் ஆயினும் என்வழி தவிர்ந்து இடறினன், இடறியென் காதலின் மொழிந்த கட்டுரை இவைஎன் பாதையும் வேறு பாவலன் அல்லன்நான் வாசகர்க்குத் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதில் பாவலன் அல்லன் நான் என்று ஒருமுறைக்கு இருமுறை சொல்லிக் கொண்டாலு. இவர்தம் ஐந்து தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு கவிதையும் இவரை சிறந்த பாவலன் என்பதைப் பறை சாற்றுவதை அறிகின்றோம். தாம் கவிதை எழுதுவதற்கான காரணங்களை ஒரு கவிதையி: தருகின்றார் குலோத்துங்கன் - நாடெனைப் போற்றும் என்றும் நல்லிசைப் புலவர் செய்யும் ஏடெனைப்புகழும் என்றும் இலக்கண இலக்கியத்தின் பீடெனக் குள்ள தென்றும் பிழைசெயேன், பெருகும் நெஞ்சம் பாடெனப் பணித்த போது பணிந்தவன் பாடு கின்றேன். கவலும்என் நெஞ்சப் பாரம் கவிமகள் தவிப்பாள் மிஞ்சும் அவலம் நின்றழுத்தும் காலை ஆறுதல் தருவாள், இந்தப் புவனமும் கடந்த கோடிப் பொலிவினள் புலன்கள் யாவும் கவரும்என் கவிதை நங்கை காதலாற் பாடு கின்றேன்.