பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xİ தரலாசிரியரைப்பற்றி... எண்பத்திரண்டாண்டு அகவையிலும் அங்கங்கே கலைகள் தேரும் அறிவன்போல் சுறுசுறுப்பாக விளங்கும் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் நாடறிந்த சிறந்த தமிழறிஞர். வீறு தமிழ் வித்தகர்.பல நூல்கள் எழுதி எழுதித் தமிழன்னையை அலங்கரிக்கும் அருங்கலைக்கோன். நம்மாழ்வாராம் சடகோபர் பொன்னடியே சரணம் என எண்ணும் நற்றமிழ்ச் சான்றோர். எளிமையும் இனிமை கொண்ட ஏந்தல். திருச்சிமாவட்டம் துறையூரில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகத் தம் ஆசிரியப்பணியைத் தொடங்கியவர் (1941 - 50). காரைக்குடி அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் (50 - 60) பணியாற்றிப் பின்னர் திருப்பதித் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராய்ப் (60 -77) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பழம்பெரும் தமிழ்ப்பெருமக்களின் தமிழ்க் கூட்டுறவும் நட்பும் தோயப் பெற்றவர். ஆங்கிலத்திலும் நல்ல புலமையாளர். இவர்தம் அறிவியல் பணியைப் பாராட்டிக் குன்றக்குடித்திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக்கோன் என்ற விருதை வழங்கியது. இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டும் வகையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்குத்"தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்தவர். குறிப்பாகத் தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக் கழகக் காஞ்சிபுரத் தத்துவ மையத்தில் எழுதியளித்த "வைணவச் செல்வம்” என்ற ஆய்வு நூல் பெருஞ்சிறப்பிற்குரியதாகும். இவர்கள் எழுதிய பல நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவை. தற்போது சென்னைப்பல்கலைக்கழகத் தென்கிழக்கு ஆசிய மரபுவழிப் பண்பாட்டு நிறுவன இயக்குநராகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.