பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தைசாமி 105 அறியும்வழி எடுத்தோத அறிந்தீர் இல்லை குளமுறையும் தவளையென நமக்குள் நாமே குலப்பெருமை பேசுவதும் கொடுமை யன்றோ? என்பது அவர்தம் நெஞ்சக் குமுறலைக் காட்டும் பாடல். மற்றொரு பாடலில் பழம்பெருமைகள் பலவற்றையும் பட்டியலிட்டுக் காட்டி விட்டு ஓரினத்தின் நிகழ்காலச் சாதனையில் நிறைவின்றேல் தொல்பழமை புகழ்வாரை முந்தையினைப் போற்றுவாரை யார்மதிப்பார் என்று வினவுகின்றார். நிகழ்காலத்தில் ஒன்றைக் கூடச் செய்யாமல் பழம்பெருமையையே பேசித் திரியும் பலரைக் கடியும் பாணியே தனி. இந்நாளின் தேவைகளை எண்ணாமல் காலமெலாம் பின்னோக்கிப் பின்னோக்கிப் பின்னோக்கிப் பேசுபவர் கூட்டம் வளர்கிறதே! என்று வருந்துகின்றார். திறமையுள்ளவர்களைப் பட்டியலிட்டுக் காட்டிவிட்டு யார் தமிழர்? என்பதைக் கூட முடிவு செய்யாமல் பலரை அந்நியப்படுத்திக் கொண்டு போகும் இழிநிலையைக் கடிகின்றார். தமிழகத்தில் உள்ள தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் உட்படத் தமிழைத் தாய்மொழி என ஏற்பர். அனைவரையும் தழுவிக் கொண்டு தமிழை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துகின்றார். 2. பேசியது போதும் : வாய்ச்சொல் வீரராகத் தமிழின் பெருமை பேசியது போதும்.திரும்பத் திரும்பப் பேசுவதால் பயனில்லை. என்ற துயரம் பல பாடல்களில் கொப்புளிக்கின்றது. செந்தமிழ்த்தாய் நிலவளங்கள் சிறந்த வேனும் தேவையினும் கோடியுள அவற்றுள் ஏதும் எந்தமிழால் தீராதோ என்னும் நெஞ்ச ஏக்கத்தால் எழுதுகின்றேன், ஆனால் இன்றும் முன்செல்ல வழிகானும் முனைப்பிலாது மூவேந்தர் பழம்பெருமைமுழங்குவோரை என்சொல்ல அவர்திருந்த என்ன செய்ய என்று ஏங்குகின்றார். இந்த நிலையில் சினம் மூள்கின்றது. அது