பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தைசாமி 407 இயற்றுதல் இயலார் கையில் பொறுப்பெலாம் தந்த நாட்டில் புல்கூட முளைப்ப தஞ்சும் ஆக்குவ தறியார் ஆற்றார் அற்பமே பெரிதாய்ப் பேசிப் போக்குவர் பொழுதை நாளும் போர்ப்பறை கொட்டி வாழ்வார் இவை இன்றைய நாட்டு நடப்பைத் தெரிவிப்பன. இன்று செயல்திறமை இல்லாத வாய்ச்சொல் வீரர் கூட்டம் தான் நாம் காண்டது. அவர் வடிப்பதும் நீலிக் கண்ணிர்தான். இவர்களைக் கவிஞர் ஈரம் அற்ற தண்ணீரின் ஊற்றுகள்' என்று தெளிவாகக் குறிப்பிடுவார். ஈரம் இல்லாத தண்ணீர் கானல் நீர். இன்றைய அரசியல் வாதிகள்வடிக்கும் கண்ணிர் முதலைக் கண்ணீர் - ஈரமற்ற தண்ணீர். 3. மொழிவளர்ச்சி - தற்பெருமை : 'வெற்று வேட்டு' போட்டுக் கொண்டே தமிழ் மொழியைத் தாம் வளர்ப்பதாகக் கூறித்திரிவோர் மலிந்த காலமிது. அவர்களைப் பற்றி, ஒளியற்ற வெப்பத்தின் உருவம் நீவிர் உம்பனியால் தமிழ்என்றும் உயர்வ தில்லை வளியுண்டு இடியுண்டு மழை.இல் லாத வானம்நீர் தமிழும்மால் வளர்வ தில்லை இமயம்முதல் குமரிவரை பரவிநிற்கும் இந்தியாவின் வாழ்வியலில் இலக்கியத்தில் சமயமெனும் சிந்தனையில் தத்து வத்தில் தமிழ்மொழியின் பங்குண்டு சாற்ற வேண்டும் இந்தியத்தின் பண்பாட்டில் விழிகள் என்ப இன்தமிழும் வடமொழியும் என்னும் உண்மை, விந்தியத்தின் வடக்கேயும் கடல்கள் தாண்டி வெளியுலகின் மன்றத்தும் விளங்க வேண்டும் உண்மை ஒளி வீசும் உயர்கவிதைகள் இவை. 4. இதிலும் அரசியல்: 'அரசியல் என்பது இங்கு நேர் பொருளன்று. தொனிப் பொருள், இறைச்சிப் பொருள். பிணியிலும் மருந்து பீடை ஆனது அணியெனப் பூண்டவை அட்டை ஆயின. என்று கவிதை தொடங்குகின்றது. கவிதையின் தலைப்பும் இதுவே.