பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் ببینیمه o

攀 புழுங்குவன் மவுன மாகப் புலம்புவன் எனது நெஞ்சம் அழுங்குரல் அடங்கும் பாதை அறிந்திலன், சரிதை தன்னில் தன்னினம் அழிக்கும் பண்பில் தமிழனுக் கினையென் பாரை இந்நிலம் கண்ட தில்லை எனும்பழி சுமப்ப தேன்யாம்? என்ற பாடல்கள் பட்டவர்த்தனமாகப் பகர்கின்றன. பகைமையை வளர்ப்பார் தங்கள் பாதையே வேத மென்னும் தகைமையர், தமிழைப் பேனத் தாங்களே வாசி சென்டார் இசையொளில் அறிஞ ரேனும் இவர்வழி ஏற்கா ராயின் வசைமொழி அன்றி வேறு வழக்கெதும் பழக்க மில்லார் கல்லையும் நிறுத்தி வைத்துக் கடவுளென்றுறுதி செய்யும் வல்லமை உயர்வு காணும் வாழ்வியல் ஆன நாளில் பொற்பினுக் குருவம் தந்து புகழ்மிகு கலைஞர் செய்த செறிவது கல்லே என்று உடைத்ததை உறுதி செய்வார் உயர்ந்தன படைக்கும் கொள்கை கடைப்பிடித் தறியார், மற்றோர் கருத்தினில் களங்கம் காண்பர். சொந்தங்கள் தேடி மண்ணில் துணைவலி பெருக்கி மேலும் பந்தங்கள் உறுதி செய்து பயன்பெறும் பாதை தேடார். இந்தக் கவிதைகள் "ஒரு பகுதி தமிழறிஞர்களை'ப் புதிர் கதிர்கள்காட்டுவனபோல் காட்டுவன.