பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 篮 வாழும் கவிஞர்கள் மாறாத பொது ளெதுவும் வளர்வ தில்லை த்தின் விதியிதற்கு மாற்ற மில்லை தேறாத புலவர்களும் வளர்ச்சிப் பாதை தெளியாத தலைவர்களும் தெரிந்த உண்மை கூறாத அறிஞர்களும் ஆய்வுப் பார்வை கொள்ளாத பண்பாடும் குடிமை செய்ய வாராத செல்வர்களும் கொண்ட நாடு வளராது வளர்கின்ற வழிகா னாது என்ற பாடலில் அகவை முதிர்ச்சிக்கு ஏற்ப, எண்ண முதிர்ச்சியும், மாற்றம் வேண்டும் என்ற நோக்கமும், மாற்றமே வளர்ச்சிக்கு அறிகுறி என்பதையும் அவர் புலப்படுத்துகின்றார். 2. அறிவியல் சிந்தனைகள் தொடக்கக்காலத்தில் 1947 சங்கப் பாடலில் திளைத்துப் பயின்று தமிழ்க் கலையும் பெருமையும் அங்குதான் உண்டு என்றவர் குலோத்துங்கன், பிற்காலத்தில் (1981, 1984) மாற்றத்தை நாடுகின்றார். காரணம் அறிவியலை ஆழப் பயின்றுள்ள பொறியியல் மேதை. உலகம் கற்றிய பெருமகன். அதன் பயனாக அகலப் பார்வையை அடைகின்றார். அதனால் அறிவியல் சிந்தனைகள் மலர்கின்றன. 1.கல்வி பற்றி வளர்ச்சி வாயில் என்ற தலைப்பில் ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க்கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வுதந்த விளைவன்று கல்வி, அதுவளர்ச்சிவாயில் என்கிறார் கல்வியுலகம் மலர்கிறது காண வாரீர் என்ற தலைப்பில் சொல்லாத சொல்கேட்கும் செவிகள் வேண்டும் தோன்றாத பொருள்காணும் விழிகள் வேண்டும் எல்லாரும் வளர்கவெனும் நெஞ்சம் வேண்டும் எதிர்காலப் புலன்வேண்டும் இவையனைத்தும் வல்லாரே வையத்தை வழிநடத்தும் மாண்புடையர் வளம்எதுவும் வருங்கா லத்தில் கல்லாத சமுதாயம் காண்ப தில்லை கல்வியுகம் மலர்கிறது காண வாரீர். பள்ளி, கல்லூரிகளை விட்டு வெளிவந்து கற்கும் கல்வியே உண்மையுடையது என்கிறார். இப்படிக்கூறும் இவர் கருத்தும்