பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி 薰3 2. உறவினர் விரிவு. துரத்து உறவினர் என்ற தலைப்பில் தரையொடும் மலையொடும்தண்புனல்கடலொடு வரைகடத் தெழும்விரி வானொடும் வானில் வெளிதிரி கோனொடும் விண்ணின் மீனொடும் எளியவன் என்வாழ்வு இணைந்தது. தாரகைக் கூட்டமும்தண்மதி பொழுதும்எம் ஊரவர் துரத்து உறவினர் ஆவர் என்று பகர்வதால் இவர்தம் உறவுபற்றிய அகலப் பார்வை நீள்நோக்கு புலனாகின்றது. நம்மாழ்வாரின் தத்துவம் காட்டும் பார்வைபோல் அமைகின்றது. 3. பொற்காலம்: நொடியும் பொற்காலம் என்ற கவிதை' பொற்காலம் என்பது என்ன என்பதை விளக்குகின்றது. வானுர்தி தேற்றிங்கு வந்தாய் இன்று வானத்தை ஆளுகிறாய். நில்லாது காற்றுலகில் நீந்து கின்றாய் நேற்றினின்றும் இன்றுயர்ந்தாய் நிதம்வ ளர்வாய்! முன்பிறந்தோம் மன்பதையில் முதல்யாம் என்னும் மூடர்களே முதுமையென்ன முயன்ற பெற்றிச் பின்பிறந்தார் உயர்வுபெறின் பிழையா? வாழ்வில் பெரியநிலை இளமைபெறின் பெருமை யன்றோ நரைமுடியில் மேதையிலை, தகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதிலை சரிதை ஏட்டில் அதைநொடியும் பொற்காலம் ஆதல் கூடும்! ஆண்டுபல இரவுகள்போல் அகலக் கூடும்! அறிவியல் உலகில் இந்த அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. நியூட்டனின் பூகவர்விசை ஒரு நொடியில் கண்டது. ஆர்க்கிமிடீஸ் தத்துவம் நீராடிக்கொண்டிருந்தபோதுகண்டது. அம்புலிப் பயணம் வெற்றி பெற்றது. பல்லாண்டுகள் முயன்ற பிறகுதானே. 4. புதிர்கள் காணும் நெறி விண்ணுலகம் உண்டெனினும் விழை வோமில்லை என்ற தலைப்பில் வரும் கவிதைகள், அறிவன்றி ஒளியெதுவும் அறியோம் இன்றெம் ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும் தெரிகின்ற நெறிகாண்போம் உண்மை தேடித் திசையெங்கும் அலைபவர்யாம் திறந்த நெஞ்சம்