பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$44 வாழும் கவிஞர்கள் விரிகின்ற கொள்கையினர் மாற்ற மில்லா விதியெதையும் எக்காலும் ஒப்போம் சாலச் சிறிதென்ற துரும்பொன்றில் பார்பு ரக்கும் செல்வமெலாம் காண்கின்ற திறந்த வர்யாம் எண்ணுவதும் படைப்பதும்எம் பணிகள் யாங்கும் எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான மண்ணுலகைச் சமைப்பதும்எம் குறிக்கோள் நாளை வருகின்ற தலைமுறையின் வாழ்வுக் காக உண்ணுவதும் உறங்குவதும் தவிர்த்தும் கூடி உழைப்பதுவே யசம்மகிழும் இன்பம் மற்றும் விண்ணுலகம் உண்டெனினும் விழைவோ மில்லை மீளாத தரகென்றும் பயந்தோ மில்லை என கவிஞரின் குறிக்கோளைக் காட்டுகின்றன.ஆராய்ச்சிப் பயணத்தின் முடிவில் தான்போய்ச் சேரும் இடம் அனைத்தும் தனக்கு இன்பம் என்பது இவர்தம் குறிக்கோள், ஓர் அறிவியல் அறிஞரின் நியாயமான குறிக்கோள் இது. அறிவியலறிவு பெற்ற பொறியியல் வல்லுநர் ஒருவர் கவிதை எழுதுவது வியப்பேயாகும். குலோத்துங்கன் கருவிலே திரு வுடையவராதலால் கவிதை எழுதுகின்றார்.அவர்தம் தமிழறிவு இதற்குத் துணை செய்கிறது. அவர்தம் அறிவியலறிவு கவிதைகளில் அறிவியல்மணத்தை வீசச் செய்கின்றது. இலக்கியம் முழுவதும் அறிவியல் முறையில் அமைய வேண்டும் என்று ஒருவரும் வற்புறுத்தவில்லை. அறிவியல் இனி தவிர்க்க முடியாதவாறு மனித வாழ்க்கையில் பெரும்பங்கு பெறும் ஆகையால் அறிவியலை இலக்கியப் படைப்பாளர் புறக்கணிக்க இயலாது. இதுவே குலோத்துங்கன் கவிதைகளில் நாம் காணும் உண்மை. 3. சமுதாய நோக்கில் அறிவியலறிஞராகவும் சிறந்த பொறியியல் வல்லுநராகவும் திகழும் குலோத்துங்கன், தாம் வகித்த உயர்பதவிகளால் மயக்கமுற்றுத் தாம் வாழும் சமுதாயத்தை மறந்து விடவில்லை. அதனையும் கடைக்கண் கொண்டு நோக்கிப் பல அருமையான கவிதைகளைப் படைத்துள்ளார். அவற்றைச் சில தலைப்புகளில் நோக்குவோம். 1. சாதிப் பிரிவினை: தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் புற்று:கோய் இது