பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி 445 சாதி யென்பது தனிமரபு அன்று இது ஆதி யிலிருந்தே அறிஞரும் பெரியரும் திருத்தம் வேண்டாத் தெளிவுடன் கூறிய கருத்துசாதியின் குலத்தின் சகதியில் தெளிந்து ஊதியம் தேடி ஊன்வளர்க் கின்ற சிறியரில் சிறியர் தினந்தொறும் சாதி வெறியினை ஊட்டி வேற்றுமை பெருக்கி என்தமிழ் மக்கள்தம் இனவுனர் வழிக்கும் புன்மையைக் கண்டு பொங்குமென் நெஞ்சின் ஆத்திரம் தாங்குவ தாற்றிலன் என வருந்துகின்றார் குலோத்துங்கன் சாதியின் உணர்வும் தமிழின வாழ்வும் மோதும் தகையின, முன்னது வாழின் என்னருந் தமிழுக் கெதிர்வரு நாட்களில் உன்னதப் பெருநிலை உறுதி யாயில்லை என அறுதியிட்டு அறைவர். இதனை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். பிறிதோர் இடத்திலும் இச் சாதி வேறுபாடு பற்றிச் சாடுகின்றார். சாதியில் சந்து பொந்தில் தன்னலக் குப்பை மேட்டில் வீதியின் கழிவில் நாற்றம் வீசிடும் சகதிச் சேற்றில் இறைவனும் ஒருவன், மாந்தர் இனமொரு குலமே, என்று பறையறைந் திட்ட மண்ணில் பசியெனச்சோறு தேடும் சாதியின் சங்க மேன்எம் தமிழர்தம் ஒருமை கொன்ற ஊதியம் தேடி வாழும் ஊழலர் வளர்வ தேன்.? மேலும் விடம் விதைப்போம் என்ற ஒன்றில், சமநீதிப் பாற்கடலை மீண்டும் மீண்டும் சாதியெனும் கயிறிட்டுக் கடைந்தீர், மேலும் அமுதேதும் காணவில்லை சாதி நஞ்சு அனல்போலப் பரவுதடா அணைப்பா ரில்லை! பிணிஎன்னின் ஒன்றுண்டுமுன்னோர் செய்த பிழைஎண்ணின் ஒன்றுண்டு, பிறக்கும்போதே