பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寰 வாழும் கவிஞர்கள் அணிகின்றதளையுண்டு சாதிபேத அமைப்டென்றோம் புற்றிதனை அகழ்ந்தெடுத்து வேனின்றிநாசின்றிமுளைக்கத்தக்க விதையென்னும்கருவின்றித்துடைத்துஎடுக்கப் டோரின்று துவங்குகின்றோம் என்று கூறிப் புறப்பட்டீர், உம்பயணம் போன தெங்கே? தாரகையின் ஒளியென்ன மின்னும் தூய சமுதாயக்குறிக்கோளைத்தாழ்த்தித்தாழ்த்திச் சேறனைய அரசியலில் சேர்த்தீர் சாதித் தீமூட்டிக்குளிர்காயும் சிறுமைசெய்தீர் என சாதிபேத விடம் விதைத்து வேளாண்மை செய்து விட்டதை எண்ணி நைகின்றார். 'சாதித் தீயில் தமிழினம் வெந்தது என்ற தலைப்பில் வகுத்த சதிகள் மற்றவர் கொணர்ந்து புகுத்திய தமக்குப் புறமெனின் இன்று சாதியை விடுத்த தமிழர் யாரடா? வேதியச் சாதியை விடுப்பினும் அரசியல் வாதியர் சாதியை வரமெனத் தாங்குவர் சாதியை வைத்துத் தலைவர் வாழுவர் சாதிகள் எங்கடா தமிழகத் தொழிவது? ஆதியில் மதத்தை அண்டி நின்றஇப் பேயது சமயப் பிடிகள் குன்றவும் காய கல்பம் கண்டது போன்று அரசியல் தன்னை ஆட்கொண் டெழுந்து முரசம் முழங்க முடியும் பூண்டது. சாதியின் வலியுடைச் சக்திதம் தமிழகம் மீதில்இன் றிலைஇதில் வெட்குவர் காண்டிலம். என்ற பகுதியில் சாதியின் கொடுமை பற்றிய கருத்தைக் காணலாம். ஒரரசு ஆணையால் தெருப்பெயரில் உள்ள சாதியினை நீக்கியது. மற்றோர் அரசு பேருந்துகளில் உள்ள பெயர்களை நீக்கியது இஃதெல்லாம் சாதிபேதத்தால் விளைந்த வரலாறு. 2. தமிழர்களின் ஒற்றுமையின்மை: தமிழ் மொழிக்கு எட்டு வேற்றுமை என்று இலக்கண நூலார் வகுத்தனர். ஆனால் தமிழினத்துக்கு "வேற்றுமைகள் கணக்கில, "நவக்கிரகம்" என்ற தலைப்பில்கவிஞர் நெஞ்சு பொறுக்காமல் விசனிக்கின்றார் செத்த நாகமும் சிறிது சீறலாம் சிதையில் ஏறிய சடலம் துள்ளலாம் ஒத்த தோக்குடன் தமிழகம் திரண்டு உரிமை கோரிய சரிதை ஏதடா?