பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி of 19 குளிர்விக்கும் தென்றலடா குறைவில் லாத புத்துணர்வின் மணற்கேணி அழகு கோடி பூக்கின்ற மணற்காடு கண்ஒவ் வொன்றும் முத்துடைய மாதுளைபோல் அங்கந் தோறும் முடிவில்லாச் சுவையமைந்த முழுமை பெண்மை இன்பத்துள் ஊற்றெனினும் நுகர்வ தென்னும் இயல்பொன்றே பெண்மையல, இம்பர் வாழ்வில் அன்பு:மது ஆற்றலது உயர்வு தேடும் ஆசையது, அடிப்படைகள் அனைத்தும் பெண்மை. எனப் பெண்மையைப் பல்வேறு உருவகக் காட்சிகளாகக் காட்டியது அற்புதம், அடிப்படைகள் அனைத்தும் பெண்மை என்று கூறுவது முக்காலும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றில்லை. ஆண் விதைத்த விதையைப் பத்து மாதம் வளர்த்து விளைச்சலாகத் தரும் ஒன்றே போதும் நிலையான சான்றுக்கு பெருமானின் பெண்ணியம் என்ற தலைப்பில் ஒரு கவிதை. சக்தியென முந்தையர்தம் பெண்ணி னத்தைத் தரிசித்த பார்வையில்ஒர் தவறும் இல்லை, பக்திவழி சென்றவர்தம் பாதை யேனும் பகுத்தறிவும் ஏற்கின்ற பார்வை அம்ம ! புன்னகையும் குறுஞ்சிரிப்பும் பொலிய நிற்கும் புத்துணர்வின் புதுவலியின் சுரங்கம், வானில் மின்னலென நெஞ்சிலொரு விசையைச் சேர்க்கும் விந்தையடாமாதரினம் வளர்க வாழ்க! வையத்தின்மாண்பனைத்தும்.ஒருசொல் கொண்டு வருணிக்கவேண்டுமெனின் அழகுஎன்பேன்யான் ஐயத்திற்கிடமின்றி, அருவம் நீக்கி அழகு தனி வடிவுபெறின் அரிவை ஆகும் தென்றலினும் மென்மையினர்.இம்பர் வாழ்வின் தேட்டமெலாம் ஒன்றாகத்திரண்டு வந்து நின்றதெனும் பண்புடையர், அகழுந்தோறும் நிறைவூறும் உயிருற்றுநிலத்தின்மாதர் காதலிலும் தீமையெனின் கனன்றுபொங்கிக் காய்வதிலும் எளியவரைக்காக்கத்தம்மை ஈதலிலும் தலைமுறையின் ஏற்றம் தேடும் இயற்கையிலும்தாய்க்குலத்துக்கிணையொன் றில்லை பாவையினைத்தன்னுடலில் பாதியாக்கும் பகுத்தறிவால்பரமசிவன் வலிமைபெற்றான்