பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வாழும் கவிஞர்கள் கற்பித்த பிரிவிவற்றின் அடியில் சாதி காலூன்றிவேரூன்றிப்புதுமை பெற்று நிற்கின்றநிலைகண்டார்.தமிழன் என்ற திறைகானார் நெஞ்சொடிந்து சிலையானாரோ? சீர்திருத்தக் கொள்கையினை நுணுகி ஆய்ந்து தெளிகின்ற பகுத்தறிவின் திறங்கள் கூறிப் பார்திகுத்தும் பண்பானர் ஈரோட் டில்தன் பாசறையில் வாழ்ந்தவர்கள் தாழ்வு நீங்கப் போர்தொடுத்த பெருவீரர் பலரிந்நாட்டின் பொறுப்பான பதவிகளில் அமர்ந்து யாவும் நேர்நிறுத்த முயல்கின்ற நிலைமை கண்டு நிறைமனதோ டோய்வுபெறச் சிலையானாரோ? இவை தவிரக்"காவியங்கள் கலைகள் அவன்பெருமை பேசும்’ என்ற தலைப்பில் மனிதன்நீ, வையத்தின் மன்னன், வாழ்வு மனப்பான்மை இல்லாது மண்ணில் நிற்கும் துணிவுபெறு, பகுத்தறிவின் துணைகொள் என்று சொன்னவன்னம் தென்னகத்தின் துயர்து டைத்தான் தடம்சொன்னான், தமிழருக்குக் கண்ணும் காதும் தன்னறிவும் மனவலியும் தந்தான் என்றும் கடன்பட்ட தமிழுலகம் நன்றி சொல்லும் காவியங்கள் கலைகள் அவன் பெருமை பேசும். என்று பாடுகிறார். அடுத்து தந்தை பெரியார் மறைந்ததைப் பற்றிப்பாடிய கையறுநிலைப் பாக்களில் இரண்டை ஈண்டுத் தருவேன். மலைசாய்த்த தையகோ தன்மான உயர்வனைத்தும் வடித்தெ டுத்த சிலைசாய்ந்த தையகோ, தென்னகத்து மண்முழுதும் தெளிவு கண்ட நிலைசாய்ந்த தையகோ, நீதியெலாம் தானாகி நின்ற வேந்தன் தலைசாய்ந்த தையகோ, தமிழகத்தின் கொழுகொம்பு சாய்ந்த தம்மா வெண்தாடி வேந்தெங்கே? வேழத்தின் நடை எங்கே? சீர்தி ருத்தப் பண்பாடி ஒளிசேர்த்த பகுத்த றிவின் சுடர்எங்கே? பழமை கோடி மண்விழச் சாய்த்திட்ட மாவீரன் குரலெங்கே? மானிடத்தின்