பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ வாழும் கவிஞர்கள் வாழையடி வாழையென வந்த சைவ மரபுக்கு வளர்கின்ற மனித வாழ்வில் நாளைவரும் தேவையொடு நடந்து செல்லும் நாகரிகம் சேர்த்ததமிழ் ஞானி சாய்ந்தான். அறிவியலும் ஆன்மிகமும் இணைந்து நிற்கும் அற்புதத்தின் தந்தைஇவன் பழமை கண்ட தெறிமுறையும் புதுயுகத்தின் நிறையும் தேர்ந்தோன் திகழ்கால நெகிழ்வுக்கு நியதி தந்தான். குன்றத்தில் குடிகொண்டான் தமிழர் வாழ்வின் குறிக்கோளில் உயிர்நின்றான் அறிஞர் கூடும் மன்றத்தில் முன்நின்றான் சமய வாழ்வில் மறுமலர்ச்சி கண்டமகன் மறைவ துண்டோ? இசைபரவ வாழ்ந்தவர்கள் இறப்ப தில்லை எங்கள்.தமிழ்க் கொள்கை இது, ஞானத் தேரில் திசைமுழுதும் தமிழ்பரவச் சென்றான் பண்டைத் தேவதை மூவரொடும் சேர்ந்தான் வாழ்க! அற்புதமான கவிதைகள் இவை. மடத்துச் சம்பிரதாயங் களையெல்லாம் உதறித் தள்ளிப் பட்டிதொட்டியெல்லாம் வலம் வந்து பாமர மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட‘குன்றை நகர் வாழ வந்த அடிகளாரை இக்கவிதைகள் நம் மனத்திரையில் நிலையாகப் பதிய வைக்கின்றன. 5. பொதுநோக்கில் 1. கவிதை பற்றி, கலைவானில் வானம்' என்ற தலைப்பில் மாடிக்குப் படியமைத்த வண்ணம் போல வார்த்தைஒரு வரியாக்கி அடுக்கி வைத்தல் வேடிக்கை யன்றுபுதுக் கவிதை முற்றும் விளங்காத தெனின்தன்று மேதைச் சின்னம், சொற்சிலம்பம் ஆடுபவர் இலக்கி யங்கள் தோன்றியநாள் தோன்றியவர் இவர்கள் செய்யும் அற்புதங்கள் சித்துக்கள் கண்டும் கேட்டும் ஆர்ப்பசிப்பார் இன்றென்ன என்று முண்டு. கலைவானில் மத்தாப்பு வானம் விட்டுக் களிப்பாரை வரவேற்போம் திருவிழாவில் விலைபோகும் பொருள்களிவை சிறிது காலம் விண்ணதிர வெடிப்பனவும் வேண்டு மன்றோ.