பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3.2 வாழும் கவிஞர்கள் இனித்திடும் மாண்பின் தனித்தமிழ் திகழ்வுற மேல்நில வானரும் விழைந்துவந் தீண்டும் நானிலத்து இருந்துசெங் கோல்நிலை நடாத்தும் இறைவி பெருமுதுக் குறைவி முற்படு மூத்த அன்னாய் மூவாக்கன்னி குறிஞ்சித் தேனே கோவலர் குழலே நிழல்மலி மருதே நெய்தல் மலரே இயலே இசையே எழில் ஆர் நடமே கடலே வில்லே கதமிகு புலியே அன்ே షీ * :: Br: or அன்பே அறமே தென்பால் தவழ்தரு மென்கால், நின்சகால் மேவுதும் மன்பதைக்கு இன்பம் மலிந்திடற் பொருட்டே. இது சங்க இலக்கிய நடையில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்ற தொல்காப்பிய நூற்பாபோல் அமைந்துள்ளது. வடவேங்கடம் ஆந்திரத்திற்குப் போய்விட்டதால் வடக்கு எல்லையை திருத்தனியாக அமைத்தார். இதில் மூத்த மூவாத என்ற முரண்பாடுள்ள சொற்கள் ஒரு பொருளுக்கே உள்ள நயம் காணத் தக்கது. தமிழ் நாளிலத்துக் கருப்பொருளாக உருவகம் செய்யப் பெற்றுள்ளதும். தமிழகத்தில் இயற்கைப் பாலை இன்மையால் அது தவிர்க்கப் பெற்றதும் தனிச் சிறப்புகள். மேலும், முத்தமிழும், மூவேந்தர் கொடியும், தமிழ் நாட்டிற்கே உரியதென்றலும் பாடலில் அமைந்த பாட்டின்பத்தைப் பறை சாந்துகின்றன.

  • படைத்திலனே' என்ற தலைப்பில் காணும் மூன்று பாடல்கள் கவிஞரின் உலப்பிலாத தமிழ்ப் பற்றைக் காட்டுகின்றன.

கிடைத்திடு மேடையிற் பேசவும் தாய் உறும் கேடுகளைத் துடைத்திடு மாறு:தம் ஆளவந் தாரைத் தொழுதிடவும் தொடுத்திடு தொன்னூல் சுவைக்கவும் அன்றித் தொடர்ந்தொருநூல் படைத்திட நேரம் படைத்தில னேனன்றன் பைந்தமிழ்க்கே வலந்தருவோர் தமை வாழ்த்தவும் இற்றை வழக்கினிலே கலந்துள நெல்லொடு கல்லும் கொழித்துக் களைத்திடவும்