பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா திருமுருகன் $33.

புலந்தரு நூல்களைச் சொல்லவும் அன்றிப் புதியசெய்து நலந்தர நேரம் படைத்தில னேஎன்றன் தற்றமிழ்க்கே அற்புதமான கட்டளைக் கலித்துறையில் அமைந்து கவிஞரின்

காவியமாவதுபாண்டியன் பரிசு போல்படைத்து மன அமைதி அை வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு பொருத்தமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து. தந்தை பெரியாரைப் பற்றியும் ஒரு சிறு காவியம் இயற்றலாம். அடுத்து'வாழிய தமிழே என்ற தலைப்பில் உள்ள ஒ: హ్రో தமிழின் தூய்மையைக் காத்த சான்றோர்களைப் புகழ்ந்து பேசுகின்றார். கண்ணுதற் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுற ஆய்ந்ததாப் பகர்த்திடு தமிழே ஞாலம் தோன்றிய நாள்.உடன் தோன்றிக் காலம் வென்றொளிர் கன்னிச் செல்வமே மலயத்து எழுத்து மதுரையில் தவழ்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலே நெற்றிக் கண்ணில் நெருப்டெழச் சீறினும் குற்றமே என்று.கூறிய கீரன், போலிப் புலமையாற் புல்லிய பாடும் காலிப் புலவரைக் காதை யறுத்தவர் குட்டும் பாண்டியன், குறைசெய் வார்தலை வெட்டும் கூத்தன், வீண்வழக் கணையச் சூறா வளியினைச் சுழற்று மாமுனி, இலக்கிய இலக்கணக் கொலைத்தொழில் புரிவார் கொட்டம் அடக்கிய செட்டியார், தமிழிற் பிறமொழி கடியும் மறைமலை யடிகள் வீறார் சொல்லால் வெடிபடச் சீறும் நாவலர் புரட்சிப் பாவலர் என்றிவர் துறைதொறும் துறைதொறும் தூய்மைகாத்தனர். என்று இவர்களைப் பட்டியலிட்டுக் காட்டி மகிழ்வார். ந பாடலில் டாக்டர் திருமுருகனின் அளவிலாத் தமிழ்ப் பற்று போலிப் புலவர்களைக் கடியச் செய்கின்றது. தமிழன்னையை நோக்கி, அவர்