பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குச் சான்றாக அமைகின்றது. ஒரு நண்பர் அகவை ஆனபின்பும் ன்றாய்? என்ற நண்பருக்கு விடைதரும் பாங்கில், படிப்பத னாலே பட்டம் பெற்றுப் பதவி யாலே :னத்தைப் பெறுவதன் இறுதி நோக்கே இன்பந் தானே? வையத்து வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் இன்பம் என்றால் எனக்குப் படிப்பதி லேயே கிடைக்கிறது இன்பம் அந்த இன்பத்துக் காகப் பாடை ஏறினும் நூலது கைவிடேன் என்று வசன கவி தருகின்றார். சரியான விடை என் இயல்பும் இதுவாதலால் என்னைக் கேட்கும் அன்பர்கட்கு இதுவே விடையாக அமையலாம். நட்பு நெறி என்ற இத்தலைப்பில் காணப்பெறும் பாடலின் பிற்பகுதி, வருமாறு பொல்லாத பண்புகளைப் போற்றாமல் யார்மாட்டும் ஒல்லும்வாய் எல்லாம் உயர்பண்பே போற்றி, அவர் தல்லாதோ அல்லாரோ நம்மிடையே வாழ்கின்ற எல்லாரிடத்தும் இணக்கமுற வாழ்வதுவே நல்லநெறி என்பேன்நான் . என்பது அருமையான உபதேசம். என் கல்லூரி வாழ்வுமுதல் 1934) இன்றுவரை நான் கடைப்பிடிப்பதும் இதுதான். - குணம்தாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி விக்க கொளல். (குறள் 504) என்று வள்ளுவர் கூறுவதும் இதுதானே. நாகரிகம், புறநாகரிகம், அகநாகரிகம் என இரண்டுவகை. முன்னது ஆடை இல்லம் உணவு முதலிய படாடோபங்கள். பின்னது வருமாறு: பெயக்கண்டும் தஞ்சுண்ணல் சினத்தைக் காத்தல் பிறர்தோயும் தன்நோய்போல் போற்றல், தம்இன் உயிர்ஈத்தும் பிறர்துன்பம் நீக்கல் என்றும்