பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இர திருமுருகன் o 3 3 தனிமனிகள் கைகோத்தால் உணவே ஆகும் சேர்த்தில்லம் கைகோத்தால் தெருவே ஆகும் தெருக்கள் பலகைகோத்தால் நகரம் ஆகும் தேர்ந்தசுரம் கை கோத்தால் இசையே ஆகும் தேயங்கள் கைகோத்தால் . உலகம் ஆகும் மாந்தர்மனம் கைகோத்தால் உலகில் ஆக மாட்டாத செயலுண்டோ காட்டு வீரே பச்சோலை கைகோத்தால் கீற்றே ஆகும் பாவையர்கள் கைகோத்தால் துணைங்கை ஆகும் வைக்கோல்கள் கைகோத்தால் பெரும்போர் ஆகும் மணிக்கயிறு கைகோத்தால் வடமே ஆகும் தக்கமலர் கைகோத்தால் மாலை ஆகும் தமிழ் எழுத்துக் கைகோத்தால் அமிழ்தே ஆகும் மக்கள்மனம் கைகோத்தால் உலகில் ஆக மாட்டாத செயலுண்டோ காட்டு விரே? இவை கவிஞருடைய சிந்தனை ஆற்றலைக் காட்டுகின்றன. 3. சான்றோர் சுந்தர மூர்த்தி நாயனாரைப் பின்பற்றி பாரதியார் முதல் பலரும் பாடியுள்ளது போல் கவிஞர் திருமுருகனார் சிலரைப் பாடியுள்ளார். அவர்களைக் காண்போம். 1. பாட்டி: ஒளவைப் பாட்டி போல் சிலர் இன்றும் உளர்.