பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: مسة مبي به ميمي و ات 8%تني இரா. திருமுருகன் 髓雪 ஒற்றுமைப்பெற்றியைக் கற்றிடச்சென்றான் காந்தியடிகளின் கொள்கைகளைக் காட்டுவன இவை, 4. பாரதி தாசன் : நான் கண்ட பாவேந்தன் என்ற தலைப்பில் வருவன இரண்டு பாடல்கள். மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாட்டென்று, ஏடெழுதும் போக்கினிலே புரட்சி, து: இசைத்தமிழில் புரட்சி, தமிழ்க் கொலைசெய் வாரைச் சாடுகின்ற மொழிப்புரட்சி, கயவர் ஆட்சி சரிக்கின்ற சொல்புரட்சி, தமிழர் மேன்மை நாடுகின்ற துறைதோறும் புரட்சி செய்தோன் நான்கண்ட புரட்சிப்பது வேத்தன் தானே. குட்டுதற்கே பிள்ளைப்பாண்டி யன்னங் கில்லை குறும்பியன வாக்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை இரண்டொன்றாய் முடிந்துதலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்தன் இல்லை வீறுதமிழ்ப் பாவடியால் விரைந்து மட்டம் தட்டுதற்கோ புரட்சிப்பாவேந்தன் இல்லை தமிழ்க்கொலைசெய் கவிஞசெங்கும் தழைக்க லாமே! இவையிரண்டும் பாவேந்தரைச் சொல்லோவியமாகக் காட்டுவன. 5. பாவலரேறு வாணிதாசன் இன்னுமொரு நூற்றாண்டிரு என்ற தலைப்பில் வருவன மூன்று பாடல்கள். அவை காக்கை பிடிக்காமல் கட்சிகளை நாடாமல் துக்கிலிடும் கூட்டம் தொடராமல்-பாக்களெனும் பொன்னைச் சொரிந்து புகழ்வளர்க்கும் பாவலநீ இன்னுமொரு நூற்றாண்டிரு. கூடும் அரசினரைக் கும்பிட்டு வாழாமல் ஏடுகளின் செல்வாக்கே இல்லாமல்-பாடலெனும் கன்னல் பிழிந்து கலைவளர்க்கும் பாவலநீ இன்னுமொரு நூற்றாண் டிரு. தக்கைகளின் முன்னே தலைசொரிந்து நில்லாமல் நக்குப் பொறுக்கிகளை நாடாமல்- சற்றேனும் தன்னலமே இன்றித் தமிழ்வளர்க்கும் பாவலc இன்னுமொரு நூற்றாண் டிரு.