பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுக் கவிதை 3. பல்வகைத்தாதுவின் உயிர்க்கு உடல்போல் பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் எனக் கவிதை இன்னதென்று நன்னூலாசிரியர் பவணந்தியார், வரையறுத்துள்ளார். இதில் யாக்கைக்கும் கவிதைக்கும் ஓர் ஒப்புமை & اتمه ۹ مه ۰ ༣ ༔༔ 3་ هيرماه بهم يتم سي ديجي يهية " கூறப் பெற்றுள்ளது. தோல்குருதி,தசை, எலும்பு முதலிய தாதுக்களால் ஆன உடல் உயிர்க்கு உடலாக இருப்பது போல, பலவகைச் சொற்களால் பொருளுக்கு இடனாகக் கல்வியறிவியல் வல்லோரால் அணிபெறச் செய்யப் பெறுவதே கவிதையாகும். இங்ஙனம் கூறியுள்ள மேனாட்டு அறிஞர்களின் கூற்றுகளிலும் நம் நாட்டு அறிஞர்களின் கூற்றுகளிலும் கவிதையின் முழுவடிவம் தோன்றவில்லை. இன்னும் நாம் காணாத பல கூறுகள் கவிதையினுள் உள்ளன என்றே நம் மனம் எண்ணத் தோன்றுகின்றது. உயிருள்ள, வளரும் இயல்புடைய கவிதையைச் சொற்கோட்டைக்குள் கிட்டியில் மாட்டிவிடலாம் என்று நினைப்பது தவறு. அஃது இயலாத ஒன்று. இது மேலிருந்து விழும் அருவி நீரைப் பற்ற முயல்வதுபோலாகும். கவிதைக்குரியபொருள்: கவிதைக்குரிய பொருளில் வரையறையே இல்லை. எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை தோன்றும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களும் அலகில் சோதி யான-ஈசன் அருளி னாலே அமையும் உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு உரிய பொருளா மையா என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்தற்குரியது. பாடுவோரின் அநுபவத்திற்கேற்ப எல்லாம் கவிதைக்குரிய பொருளாக அமையலாம். உலகம் தோன்றிய நாள்தொட்டு இன்று வரையிலுமுள்ள பழம் பொருளான இருசுடர், விண்மீன், கருமுகில், மலை, காடு, ஆறு, கடல், மான், முயல், கிளி, மயில், குழந்தை முதலியவை கவிதைப் பொருள்களாக அமைந்துள்ளன. அங்ங்னமே காதல், வீரம், இன்பம், துன்பம் போன்றவையும் பாட்டில் அமைகின்றன. இவை பழம் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. புதுமையான பாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றிற்கு உணர்ச்சிவூட்டிப், புதுப் பொருள் பற்றிப் படைக்கும் திறன் கவிஞர்களிடமே உள்ளது.