பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்டான ரோட்டின் மீதில் உல்லாச மாகப் போனேன். இது விளச்சீர், மாச்சீர், தேமா என்ற அமைப்புடன் கூடிய அறுசீர் ஆசிரிய விருத்தம். எதுகை மோனை எதற்கும் குறைவில்லை. இதுவும் ஒருபாட்டாக எந்த உணர்வும் தரவில்லை. எனவே இதெல்லாம் பாட்டாகாது. எது பாட்டு என்பது பற்றிக் கூறுகிறார் கவிஞர். ஒருமொழி தன்னில் உயர்பாட்டு இயற்ற அம்மொழி இலக்கிய அறிவு வேண்டும் யாப்பிலக் கணமும் இலக்கியத் தோய்வும் உணர்வும் கலந்தே உருப்பெறும் கவிதை என்று கூறியவர் பாட்டு என்பதற்குச் சான்றுகள் தருகின்றார். முருகிச் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவி செம்பொற் கபாடத் திறமினோ இது கலிங்கத்துப் பரணியில் கடைதிறப்பு 30 வருவது. கைக்கரும்பு என்ன கணைன்ைன நீஎன்ன மன்மதா-இந்தச் செக்கரும் பாவி நிலவுமே போதாதோ மன்மதா இது திருக்குற்றாலக் குறவஞ்சியில் 34-1 வருவது. காலயுகக் கொடியோன் கைஆயுத விழியால் மாலாயுதம் ஈன்ற மாமணியைத் தானுதிர்த்தாள் இது கூளப்பநாயக்கன் காதலில் வருவது.இங்கெல்லாம் நாம் பாட்டைக் காண்கின்றோம். இக்காலத்திற் சிலர் சீடையும் முறுக்கும் சேர்ந்தாற்போ லேதின்றால் தாடை வலியைத் தரும் புதிய தனிப்பாடல்) என்பது போன்ற வெள்ளைப்பா பாடுவர்.இதுபோன்றவை பாட்டாகா. 2. கவிஞரின் ஒருமைப்பாடு பற்றிய கருத்து சிறப்பானதாகும் அரசியலில் ஒருமைப்பாடு , வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்என்று