பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

já வாழும் கவிஞர்கள் வைணவ ஆச்சாரியார்கள் இந்த மெழுகுருண்டையை எடுத்துக் காட்டாகக் கொண்டு இறைவனது திருக்குணத்தை விளக்குவர். பொன் வணிகன் பொன் துகளை ஒற்றி எடுத்துச் சேர்ப்பதுபோல் பரம காருண்யனான இறைவன் நாம் அன்றாடம் புரிகின்ற, நல்வினைகளை ஒற்றி எடுத்து வைத்துக் கணக்கிடுவான். மேலும் அவற்றிற்கேற்ப நாம் வினைப் பயன்களை அதுபவிக்க வேண்டியிருக்கும் என்று விளக்குவர். 'குப்பை என்றாலே செல்வம் என்பது பொருள். பொற் கொல்லர் பணி இடங்களிலும், நகைக்கடைக்கு முன்னால் உள்ள இடங்களிலும் சேரும் குப்பைகளிலிருந்து முப்பது நாற்பது சவரன்களைச் சேர்க்கும் நிகழ்ச்சிகளையும் நேரில் கண்டதுண்டு. நகைக்கடைகளைக் கடந்து வருங்கால் சிவன் கோவிலை அடைவோம். அந்தத் திருக்கோவில் ஊருணியைப் பற்றிக் கூறுகின்றார். தீதாற்றம் பாய்ந்துநம் மூக்கினைத் தீண்டிடுமேல் ஆனுசர்ந்தான் திருக்கோயில் ஊருணியும் அண்மியதா எண்ணுங்கள், அந்த ஊருணியில் எழுநாற்றம் விண்ணுலகம் எட்டும் வீறுடைய தாயிருக்கும் குளத்தில் முழுகி எழுபவரைக் காணின் திறத்தில் திருமாலை நினைவிற் கொணர்வார்கள் அடுத்து. ஆடவர் பயிலும் மீசு:உயர்நிலைப் பள்ளியைக் குறிப்பிட்டு 'பூங்கொடி யின் தந்தை முடியரசனைக் காட்டி அவர்தம் பெருமையை உணர்த்துவார். தொடர்ந்து இந்து மதாபிமான சங்கத்தைக் காட்டி, அங்கு வாழ்ந்த இராய.சொ.இல்லாமையால் "திடல்விழுங்கிப் போனதனால் வெறுமை திகழ்த்திருக்கும்" என்று மனவருத்தத்துடன் குறிப்பிட்டு இராய.சொ.வின் பெருமைகளை எல்லாம் பன்னி உரைப்பார். பின்னர் காரைக்குடித் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பார். ஒரு துரையீரலுடன் வாழும் கவிஞரிடம் இறைவன் இதயத்தை விட்டு வைத்தான். அதனைச் சிறந்த இதயமாகவும் மாற்றியருளினான். அதனை அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டு எழுதிய இவர்தம் நகைச்சுவைப் பண்பு என்றும் இவரை வாழ வைக்கின்றது. இவருடைய வாழைமரம் என்ற கவிதை அற்புதமான படைப்பு வாழையே தன் வரலாற்றைக் கூறுவதாக அமைந்தது. அந்நியச் செலாவணியை அள்ளிவரும் பொருளாகக் குறிப்பிடும் பொழுது