பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி, 155 பொருளியலின் சாயல் தொனிப் பொருளாக அமைந்து விடுகின்றது. வாழை கரும்பைப் போல் வந்தேறி அல்லவென்றும், தான் மண்ணின் மைந்தன் என்றும் கூறும்போது அதன் உரிமைக் குரல் நம் கனதில் ஒலிக்கின்றது. வாழையின் பாடல்களைப் பன்முறை படித்தால் ஒவ்வொன்றும் ஒருபடித் தேனாக இனிக்கும். முக்கனியில் வாழைக் கனியும் ஒன்று என்பதை காவியப் புலவோர் எல்லாம் கனிமூன்றில் ஒன்ற வைத்தார் என்ற அடிகளில் புலப்படுத்தி வாழைக்கனிபெருமிதம் கொள்ளுகின்றது. சில பாடல்களால் வாழை தன் சிறப்பைப் புலப்படுத்திக் கொள்வதைப் வண்டுகன் பூவில் மொய்க்கும் வடையாகச் சுட்டு வைத்தால் கண்டவர் கண்கள் மொய்க்கும் கனிகளைக் காணின் மென்பூச் செண்டுகள் அனைய பிள்ளைச் சேய்களும் மொய்க்கும் வாழ்க்கை உண்டெனின் மொய்க்க வாழும் ஒன்றுக்கென் னிகர்யார் சொல்வீர்! பலரும் வாழையை விரும்புவதால் வாழைக்கு நிகர் வாழையே என்பது இதில் காட்டப்பெறுகிறது. பின்வரு வாருக் கெல்லாம் பெருவாழ்வு தருதல் வேண்டி என்னிடம் காலி செய்வேன் இஃதென்றன் குறிக்கோ னாகும் இன்னுமோர் ஆண்டுக் காலம் என்பணி நீட்டிப்பீ ரென்று உன்னியோர் வேண்டு கோளை அனுப்பிட உவந்தி லேன்யான் வாழை பிறருக்கிடம் கொடுக்கத் தன்இடத்தைக் காலி செய்கின்றது. மனிதர்கள் தம் பதவிக் காலத்தை ஓர் ஆண்டு நீட்டிக்க வேண்டுவது போல் வாழை வேண்டுவதில்லை. மனிதர்களின் சுய நலத்தைக் குறித்து மெல்லிதான கிண்டலை இதில் காணலாம். பலமுறை கருவு யிர்த்துப் பத்துக்கு மேலாம் பிள்ளை