பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் 45 xx பொல:ெல வென்றே ஈன்று தலமெலாம் பொன்ற வாழேன் தலமுற ஒருமு றைதான் நான்கருக் கொள்வேன் இந்தக் குலமுறை ஒழுக்கம் என்றன் உயிரினும் மேலாம் கொள்வேன் வாழை தன் குடும்பக் கட்டுப்பாட்டைக் காட்டி மனிதர்கள் அவ்வாறு இல்லையென்று கிண்டலாகப் பேசுகின்றது. சிவப்பு:முக் கோனக் காட்சி தெருவெங்கும் விளங்கக் கண்டிர் உவப்புற ஒன்றின் மேலே கருக்கொள ஒருப்ப டாத தவப்பெருஞ் சிறப்பை எண்ணித் தந்தாரா பதும பூடன்’ அவமுற்றேன் இந்தி யாவின் அரசுசொற் கடைப்பி டித்தே 'ஒன்றுக்குமேல் எப்போதும் வேண்டாம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தும் பதும் பூடன் என்ற விருது வழங்கப் பெறவில்லையே என்று. தான் பெருமை இழந்த நிலையை எண்ணி மனம் கவல்கின்றது வாழை, பாளைப்பல் வரிசைப் பெண்டிர் கருங்குழல் பனைத்தோள் வீழ வாழைப்பூக் கொண்டை போட வடிவம்தான் கொடுத்த தன்றோ? தென்னம்பாளைச் சிரிப்புக்காரிகட்கு வாழைப்பூக் கொண்டை போடத் தான்தான் வழி காட்டியதாக எண்ணிப் பெருமைப் படுகின்றது. காரில்தான் ஈனும், கூதிர்க் காலத்தே ஈனும், இந்தப் பாரிலே செடிகள் ஒவ்வோர் பருவத்து மட்டும் ஈனும் ஊரிலே நான்மட் டும்தான் உங்களைப் போலக் காலம் ஆறினும் ஈன்றி ருப்பேன் தென்னைஎன் அண்ண னாவான். இதில் வாழை, தான் எல்லாக் காலங்களிலும் மனிதர்களைப் போலப் பிரசவிக்கும் பேறு பெற்றிருப்பதைப் பெருமையுடன் பேசுகின்றது.