பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+53 வாழும் கவிஞர்கள் சாதியை விட்டு வேறோர் சாதியில் மனங்கொள்ளாத தன்னை அறிவியல் வல்லார் பூவினால் கலப்புமணம் செய்து ஆங்கிலோஇந்தியன் என்றாற் போலப் புதுச் சாதியை உண்டாக்கி விட்டனர். இந்தச் சீர்திருத்தத்தைப் பொருட்படுத்தி அரசு தனக்குப் பொற்பதக்கம் வழங்கவில்லையே என்று கிலேசப் படுகின்றது. தன்னுடைய பல்வேறு பயன்களைச் சிறிதும் கருதாமல் மனித இனம் சந்தனக் கட்டை வீரப்பனைப் போல கடுகளவும் இரக்கமின்றித் தன்னைக் கழுத்தறுக்கின்றது. சித்திரவதையும் செய்கின்றது என்று முத்தாய்ப்பாகக் கூறுவதைக் காண்போம். இலைமுதல் கிழங்கி றாக t எத்தனை பொருள்கொ டுத்தேன் விலைமுதற் பொருளாய் மாறி வேண்டிய நலங்கள் சேர்த்தேன். கலைதெனி மாந்தர் நன்றி சிறிதேனும் காட்டா ராய்என் குலையினை அறுக்கின் றாரே கொடுமையை என்ன சொல்வேன்? இலையின்ைக் கேட்டார், பின்னர் இன்கனி பறிப்பார் வண்ணச் சிலையெனத் தெருவில் வைப்பார் திருமணம் முடித்து விட்டால் துலையிலாத் துரியன் தம்பி - துரோபதை துகிலை வாங்கும் நிலையென உரிவார் நானோ நானத்தால் வெளுத்துப் போவேன் கவிஞர் தன்னை வாழையாகவே கருதி ஒட்ட உணர்ந்து நைந்து உருகுவதைக் கண்டு நாமும் அந்நிலையை எய்துகின்றோம். 'கறுப்புப் பணம் என்பதைப் பற்றிக் கவிஞர் பேசும் போதுதான் இன்றைய நிலையைத் தோலுரித்துக் காட்டும் பெருமையை அடைகின்றனர். - - - கறுப்புப் பணத்தையே பேச வைத்துத் தான் ஒதுங்கிக் கொள்ளுகின்றார். கறுப்புப் பணத்தின் அவதாரம் பற்றிக் கவிஞர் கண்ணனும் அவதா ரங்கள் ஒன்பதே காட்டி னானாம் எண்ணின்னன் அவதா ரங்கள் எழுதவும் முடிவ துண்டோ?