பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி $53 என்கின்றார். அவரவர் செய்த வினைக்கேற்ப அவரவர் பிறப் என்பது மெய்ப்பொருள் விளக்கம். ஒருவர் வினை பிறிதொருவர் போகாமல் பார்த்துக் கொள்வது இறைவனது ஆட்சி முறை இந்த முறை அணுவளவும் தவறாது நடைபெற்று வருகின்றது. ஆனால் கறுப்புப் பணத்தின் பிறப்பு பிறர் செய்யும் வினையின்மேல் நேரிடுகின்றது. பேராசை வணிகர் நெஞ்சும் பிழைபட்ட வரிவி திப்பும் தேராக மோதிக் கொள்ள நிலத்தில்தான் பிறந்து வந்தேன் யாராரோ செம்முக் கோணம் எடுத்தாலும் தடைசெய் தாலும் ஆதாலும் தடுக்கெ ாைதுஎன் பிறவியை அறுக்கென னாது. என்பது கறுப்புப் பணத்தின் சுய புராணம். தான் இருட்டிலே பிறந்தாலும் தனக்குப் பகையானாரை உருட்டி ஒடுக்க முடியும் தேன் இருட்டில் கிடைத்தாலும் அதன் சுவை கெடுமா? என்று கேட்கின்றது கறுப்புப் பணம்.கண்ணன் இருளில்தான் பிறந்தான். ஆனால் அவன் ஆற்றிய திருவிளையாடல்கள். எத்தனை என்று நமக்குத் கேட்கத் தோன்றுகின்றது கட்சி அரசியலில் கறுப்புப் பணம் ஆற்றும் திருவிளையாடல்கள் சொல்லி முடியா. இன்றைய மத்திய மாநில அரசுகளில் அது புரியும் திருவிளையாடல்களைச் செய்தித்தாள்கள் வெளியிடுவதைக் காண்கின்றோம். ஆளும் கட்சிகளிலும் சரி, எதிர்க் கட்சிகளிலும் சரி, அதனை ஒதுக்கித் தள்ளி வாழும் பத்தினித் தன்மையுள்ள ஓர் அரசியல்வாதி உண்டா? கறுப்புப் பணத்தின் செல்வாக்கு இல்லாத அரசே இல்லை என்பது அங்கையில் நெல்லியாம். அதன் திருவிளையாடல்களை அதன் வாயாலேயே கேட்போம். ஆண்டவேசர் கட்சி தன்னை எதிர்க்கட்சி ஆக்கி வைப்பேன் தீண்டுவார் ஆரும் இன்றித் தேய்ந்தஒர் கட்சி தன்னை மீண்டும்தான் ஏற்றி வைப்பேன் மேல்வரும் இயல்பை எல்லாம் ஈண்டுநீர் தெளிவீ ராயின் என்னலால் அரசொன் றுண்டோ?