பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醬 வாழும் கவிஞர்கள் என்னாலே முளைத்த கட்சி எத்தனை யோஉண் டென்றன் பின்னாலே எம்மெல் லேக்கள் பின்பற்றித் திரிவ துண்டு கண்ணால் நான் அசைப்பே னால் கட்சிகள் பிளந்து போகும் சொன்னால்நீர் நம்ப மாட்டீர் தொழத்தகும் கடவுள் நான்தான். பொருளியல்,அருளியல், திரையுலகம் போன்ற இடங்களிலெல்லாம் தன் ஆதிக்கம் இருப்பதாகக் கூறும் இன்னும் தன் ஆற்றலைப் பற்றிக் கூறும் போது எத்தனைப் பிறப்பெடுத்தாலும், புலப்படேன் கடவுள் போலப் புதைசெய்வேன் வினையைப் போல என்கின்றது. புகழிலும் கருஞ்செல்வம் புகுந்ததைக் காட்டுவார். உடலுக்குப் பனந்தான் செல்வம் உயிருக்கோ புகழ்தான் செல்வம் கடைத்தேங்காய் திருடிக் கோயிற் கடவுளுக் குடைத்தாற் போல உடைப்பிறர் செல்வம் ஈந்து உயர்வள்ளல் வேடம் போட்டுக் கெடல்இலாப் புகழ்செல் வத்தும் கருஞ்செல்வம் சேர்த்தார் உண்டே மேலும் கல்வியிலும் கருஞ்செல்வம் சேர்ந்து கொண்டி ருப்பதைப் பட்டவர்த்தனம் ஆக்குவார். கல்வியும் செல்வம் என்றால் அதற்குள்ளும் கறுப்புச் செல்வம் புல்லுதல் இயல்பு தானே பொழுதெலாம் வீன டித்தோர் நல்விடைத் தாளைத் தேடி நாடெலாம் அலைந்து பெற்ற கல்விச்சான் றிதழும் கூடக் . கறுப்புச்செல் வம்தான் அன்றோ? அண்மையில் மருத்துவ, பொறியியல் வகுப்பில் சேர்ந்தோரின் தில்லு முல்லுகள் வெட்ட வெளிச்சம் ஆனதை நாம் அறிவோம். அடுத்து கறுப்புப் பணத்தின் வேண்டுகோள், நயமானதாக உள்ளது.