பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. புன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாதராஜா இவர் ஒர் அபூர்வமான மனிதர். மதுரை மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1933, ஏலக்காய் வேளாண்மைத் தொழிலில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சிறந்த தமிழறிஞர். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்கின்றார். சிறந்த மொழி பெயர்ப்பாளர். ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை 'ஆமுக்த மால்யதா' சூடிக் கொடுத்தவள் என்ற பெயரில் பூரீ கிருஷ்ண தேவராயரால் தெலுங்கு மொழியில் படைக்கப் பெற்ற காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் பெரும்புகழ் பெற்றவர் 1988. கபிலரது குறிஞ்சிப் பாட்டைத் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். பல திறப்பட்ட பன்னூல்களின் ஆசிரியர். பல நிறுவனங்களைத் தொடங்கி அவற்றைச் சிறப்புடன் கண்காணித்து வருபவர். மரபுவழிக் கவிதை களையும், புதியவகைப் பாடல்களையும், புதுக் கவிதையையும் இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். சிறுகதை, கட்டுரை, ஒப்பாய்வு போன்ற நூல்களையும் படைத்தவர். அரிய கருத்துக்களை மிக எளிய முறையில் விளக்குவதில் வல்லுநர். ஆரவாரமின்றி அருந்தொண்டாற்றி வரும் இப்பெருமகனார் பெற்ற விருதுகளையும், பாராட்டுதல்களையும் பன்னி உரைக்கில் பாரதமாக விரியும். மரபு வழியில் இயற்றிய சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். கற்பனைப் பொய்கை: இஃது இவ்வாசிரியரின் கவிதைத் தொகுப்பு 1972 பல்வேறு காலங்களில் எழுதப் பெற்றவை. இளமையிலிருந்தே கவிதை படைக்கும் திறன் இவரிடம் அமைந்திருந்தது. இந்நூலில் மரபுக் கவிதைகளையும், புதுவகைப் பாடல்களையும் அமைத்துள்ளார். இந்தப் பொய்கை அழகியல், அறவியல், அறிவியல், அரசியல் என்ற நான்கு கரைகளைக் கொண்டது. பொய்கைக் கரை எதுவாக இருந்தாலும் பொய்கையில் உள்ளது கவிதைப் புனல், தெள்ளத்தெளிந்த குளிர்ந்த தமிழ் வெள்ளம். பன்மொழிப்புலமையும், இலக்கியப் பயிற்சியும் உடைய ஒரு தனிமனித