பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கு. ஜகந்நாதராஜ: 467 உள்ளத்தில் தோன்றும் கருத்து உணர்ச்சி, உணர்வு ஆகிய மூன்று ஆறுகளும் ஒன்றாகிக் கற்பனை போய்கையில் சங்கமமாகி இருப்பதை இங்குக் காணலாம். கவிஞரே. மண்ணும் விண்ணும் மகிழ்ந்து தழுவி- இக் தண்ணீர்ப் பொய்கையில் தவழ்தல் பாரீச் ! கற்பனைப் பொய்கையில் கவிதை மலர்கள் அற்புத மாகவே அலர்வதைப் பாரீ ! பொதிகைத் தென்றல் பொய்கையில் குளித்துப் புதியதோர் வெறியுடன் புறப்படல் காணிச் ! என்று காட்டுவார். அழகுக் கரையிலிருந்து நோக்கும் போது 18 மலர்கள் தென்படுகின்றன. மலரின் மணம் என்ற தலைப்பில் மலர்களே பேசுவதாகப் பத்துக் கவிதைகள் அமைந்துள்ளன. கொட்டும் மழையினுக் கஞ்சிக் குணம்தரும் என்று விரும்பிப் பட்டெனும் இழைகளின் ஊடே பதுங்கிக் கிடந்திடமாட்டோம் தென்றல் வந்து வந்து தீண்டிச் செல்லும் இன்பம் தன்றென மதித்து தாங்கள் நாளையும் இருப்பதில்லை. துரசியில் விழினும் வருந்தோம் தோகையர் சூடினும் வருந்தோம் பூசனை புரிந்தபின் எறிந்தே புழுதியில் களையினும் வருந்தோம் (9) வாழ்நாள் முழுதும் மணமும் மதுவும் தந்தோம் அதற்காய் தாழ்நாள் வந்தது என்றே சஞ்சலம் கொள்ள மாட்டோம் இக்கவிதைகளில்" வாழ்வாவது மாயம்,மண்ணாவது திண்ணம் என்பதன் எதிரொலியும்